இலெமூரிய மக்களது நாகரிகம்
75
இலெமூரியர்களிடையே கொடுக்கல் வாங்கல் முறையிலும் நாணயம் வழங்கப் பெறவில்லை.உழைப் புக்கு ஊதியம் ஆவதெல்லாம் பொது உணவு, உடை இவற்றுட் பங்கேயன்றி வேறில்லை. தம்மிடம் கிடை வேறு புலத்தவரின் பொருள்களுடன் அவர்கள் பண்டமாற்றுச் செய்து கொண்டனர்.
யாத
பொருள்களைமட்டும்
போக
கலைத்
கலைப்பயிற்சி வகையில் அவரவர்க்குப் பிடித்த கலையை அவரவர் மேம்படுத்திக்கொண்டு எல்லா வகை உதவியும் செய்யப்பட்டது. தொழிலாளர் பிழைப்புக்குக் கலையை எதிர்பார்த் திருக்க விட்டுக் கலையின் வன்மை, உயர்வு முதலிய வற்றைத் தற்காலத்தவர்போல் அவர்கள் கீழ்ப்படுத்த வில்லை. அறிவுத் துறையிலுள்ளவர்க்கும் இதே வகை யில் உணவுக்கும், உடைக்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
ய
இலெமூரியர்களின் வாழ்க்கை விவரங்களைப் படித்துப் பார்க்கும் தற்காலத்தான் ஒருவன் கண் ணுக்கு அவர்களிடம் ஒழுக்கமுறையே கிடையாது என்று தோற்றும். திறந்த உடல் பற்றிய எவ்வகை வெட்க உணர்ச்சியும் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் தற்கால வெற்றுடற கழகங்கள் மாதிரி வேண்டுமென்று ஆடையில்லாமல் இருப்பதில்லை. ஆயினும் குளிக்கும் இடங்களில் இருபாலாரும் ஆடை யின்றிக் குளிப்பதிலும் நீந்தி விளையாடுவதிலும் அரு வருப்பு அற்றவரா யிருந்தனர்.
இலெமூரியர், இந்தியர் எகிப்தியர் முதலிய கீழ் நாட்டு மக்களைப் போலவே அரையைச் சுற்றித் தொங்கலான ஆடை கட்டிவந்தனர். அவர்களது