76
குமரிக் கண்டம்
நாடும் இந்தியாவைப் போலவே வெப்பமுடையதா யிருந்ததனால் இந்த ஆடைமுறை மிகப் பொருத்த மானதாகவே இருந்தது.
இலெமூரியரிடை இருபாலார்க்கும் பொதுவான ஒழுக்க முறைகளும், மணவினை முறைகளும் இருந் தன. அவற்றுட் சில இன்னும் பஸிபிக் கடற்புறத்தி லுள்ள தீவுகளில் காணப்படுகின்றன.
மனமொத்த காதலர் இருவர் மணவாழ்வினை ஏற்க விரும்பினால் முதன்முதலில் அவர்களது சமயத் தலைவரை அணுகுவர். சமயத் தலைவரை இலெமூரி யர் தம் மொழியில் 'கு' என்று வழங்குவர். அவரே ஆசிரியராகவும், ஊர்த் தலைவராகவும், முதல் வகுப்புத் தலைவராகவும் இருந்தார். இவர்முன் காதலர் சென்று தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வர்.
அதன்பின் இருதிறத்துப் பெற்றோர், உறவினர் முதலியவர்களை அக் 'கு' அல்லது குரு அழைத்து அவர்களுடன் கலந்து அவ் விருவரது வாழ்க்கைப் பிணிப்பு விரும்பத்தக்கதுதானா என்பதை ஆராய்ந்து விரும்பத்தக்கதே என்று துணிந்தபின், அவ் விருவரது உடை, உடைமை யாவற்றையும் அகற்றிவிட்டு வெறு
மயாக ஊர்க்கு வெளியேயுள்ள காட்டில் தனிமை யில் துரத்திவிடுவர். அவர்களிடம் ஒண்பொருள் (உலோகம்) எதுவும் அப்போது இருக்கப்படாது.
இந்த நிலையில், அவர்கள் காட்டினுள் 50-கல் தொலைவரைச் சென்று அங்கே இரண்டு திங்கள் பொழுதேனும் காலங் கழித்து வரவேண்டுமென்று அவர்களுக்கு ஆணை தரப்பட்டது. அவ் வெல்லையுள் அவர்கள் தங்களுக்கான ஆடைகள் செய்துகொண்டு வாழப் பயின்றனரா, காட்டு விலங்குகளிலிருந்து தன்