இலெமூரிய மக்களது நாகரிகம்
77
காதலியைக் காதலன் காத்து அச்சமகற்றி வாழ்ந் தன்னா, காதலி காதலனுக்கு எவ்வகையினும் ஒத்த துணைவியாய் இருந்தனளா என்பனவெல்லாம் மறை வாயும் நேரிடையாய் உசாவியும் அறியப்பட்டன.
அவர்கள் அன்பு, இத்தனைத் தேர்வுகளிலும் தேறிப் பின்பும் மாறாதிருந்தால், கோவிலில் வைத்துப் பல நுண்ணிய வினைகளுடன் அவர்களது மணவினை நிகழ்த்தப்பெறும்.
தேர்வுகளுள் இன்னொன்றும் உண்டு. காட்டுவழி யினின்று வந்தவுடன் குரு காதலர் ஒவ்வொருவரிட் மும் ஒண்பொருள் (உலோகத்) துண்டு ஒன்று கேட்பர். அது, அவர்களிடமில்லாவிட்டால் காட்டுக் கனுப்பும் நாள் ஒரு திங்கள் ஒத்திவைக்கப்படும்.
தேர்வுகளுள் எதிலேனும் தவறினால், அக்காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் மணக்க முடியாததுமட்டு மன்று, மணப் பேச்சே பின் எடுக்கவும் இயலாது. மணவாழ்வு முறிவு என்னும் பெயர்கூட அன்று
கிடையாது.
மண வினைகளுள் குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. மணமக்கள் கைகளின் சுட்டுவிரல்க ளிரண் டிலும் ஓரங்குலம் கத்தியால் செதுக்கிச், செதுக்கிய இடத்தில் இரண்டையும் சேர்த்து (ஒட்டுமாங் கன்றை ஒட்டிப் பிணைப்பதுபோல்) பிணைத்து இரு வர் குருதியும் ஒருப்பட்டொழுகச் செய்வர். (தமிழ் நாட்டில் செதுக்குதல்மட்டும் அகற்றப்பட்டு விரல்கள்
பிணித்துவைக்கப்படுதல் காண்க.)
பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்புத், தாய் தந்தை யரிடமே விட்டுவிடப்படவில்லை. ஊர்ப் பொதுவில் பிள்ளை வளர்ப்புக் கழகங்கள் இருந்தன. மருத்து