பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

குமரிக் கண்டம்

வரும் மிக உயர்நிலையி லிருந்தனர். மருந்துகளைவிட இயற்கை முறைகளும், உள்ளத்தை இயக்குவதன் மூலம் உடலை இயக்கி நோய் நீக்கு முறைகளும் அந் நாள் மிகுந்திருந்தன.

சாவு என்பதைக் கண்டு இக்காலத்தவர் அஞ்சும் அச்சத்தின் நிழல்கூட அன்றில்லை. சாவுக்குப் பின்னும், பிறப்புக்கு முன்னும் உள்ள வாழ்வுகளை அறிந்தவர்கள் அவர்கள் என்று மேலே கூறப்பட்டது. எனவே, அவருக்குத் (தமிழருக்கு எப்படியோ அப் படியே)

"உறங்குவதுபோலும் சாக்காடு; உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு."

மேலும் இந்நாளிலோ, அந் நாளில் வேறுபல நாடு களிலும் இறந்த உடலைப் போற்றி உயிரிருக் கும்போதுகூடக் காட்டாத பூசனைகளை யெல்லாம் காட்டிப் பூசிக்கும் வழக்கம், உண்டு. ஆனால் இலெமூரி யரோ (பழைய சித்தர்கள் போன்று)

"நார்த்தொடுத் தீர்க்கிலென் ! நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்? தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே"

எனக் கொண்டு பிணத்தை எங்கெறிந்தா லென்ன என்று அமைந்த கருத்துக்கொண் டிருந்தனர்.

மேலும், பிறப்பு வாழ்க்கை யரும்பு; வாழ்வு அதன் வளர்ச்சி ; இறப்பே அதன் முதிர்வு; கீழ் வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்குப் போகும் மாணவ னுக்கே இறக்கும் உயிர் ஒப்பாகும். தேறியவனுக் காக வருந்தும் ஆசிரியனையே இறந்தவனுக்காக