இலெமூரிய மக்களது நாகரிகம்
79
வருந்துபவர் ஒப்பர் எனக் கொண்டவர் இலெமூரியர்; ஆகலான், தமது உடம்பினைப்பெற்ற பயன் அடைந்து விட்டோம் என்றோ, உடம்பு அப் பயனைப் பெறுதற் குரிய தகுதியை இழந்துவிட்டதென்றோ கண்டவுடன் தாமே தமது உயிரை விடும் இயல்புடையவர்.
இம் முறை தற்கொலை முறையன்று. உடம்பை அழிக்காமலே உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் அருஞ்செயல் அவர்களிடம் மிகுதி. இவ் வகையில் இளமையில் உயிர்விட்டார் சிலர். அங்ஙனம் உயிர் நீப்பார் அதனை முன் கூட்டி உறவின் முறையார்க்கு அறிவித்தழைக்க அவர்கள் வந்திருந்து வழியனுப்பு வதும், சில சமயம் இறப்பார் தமக்கான கல்லறை கட்டிவைத்து அதில் தம் கைப்பட இறக்கும் நாள், இறக்கும் தம் பெயர், தமது குறிக்கோளான மொழி கள் இவற்றைச் செதுக்கிப் பின் இறந்து அதில் அடக்கம் செய்யப்படுவதும் உண்டாம்.
இச் செய்தியுடன் தமிழரது வடக்கிருத்தல் என் னும் வழக்கினையும், முதுமக்கள் தாழிகளையும் பொருத்தி நோக்குக.
இலெமூரியரிடமுள்ள கலைச் சிறப்புகளுள் ஒன்று அவர்கள் இறந்த உடலின் எலும்பு மட்டுமன்று, தசைகூடக் கெடாது வைத்திருக்கும் ஆற்றல் படைத் திருந்தமை ஆகும். இவ் விரண்டும் நல் நிலையில் வைக் கப்பட்ட உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நம் நாகரிகந் தோன்றி ஒன்றிரண்டாயிர ஆண்டு களே ஆயின. ஆனால் இலெமூரியர் நாகரிகம் உயர்நிலை அடைந்திருந்த காலத்தில் அது நூறாயிரக் கணக்கான ஆண்டுகள் வளர்ச்சியடைந்து முதிர்ந்தி ருந்தது.