பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

குமரிக் கண்டம்

இதன் பயனாக அவர்கள் வாழ்க்கைப் பயிற்சியி லும், தொழில் நுட்பம், விடாமுயற்சி, இயற்கை அமைதிகளுடன் ஒத்துழைப்பு முதலியவற்றிலும் மிகவும் மேம்பட்டிருந்தனர். குறைபட்ட அறிவு, அக் குறை யறிவால் கறைபட்ட உள்ளம் என்பவை அவர்களிடையே கிடையா. போலி அறிவினாலும், வாழ்க்கையைப் பற்றிய தப்பெண்ணங்களாலும் அவர்கள் கருத்துக் குழப்பமுற்றதில்லை.

சமய வகையிலும் அவர்களது அறிவு களங்கமற் றிருந்தது. ஏனெனில், உலகத்தோற்றம், நடுக்கம், உயிர்களின் நிலை ஆகிய அடிப்படையான செய்தி களில் எல்லாம் அவர்கள் குரங்குப்பிடியாக ஏதே னும் ஒரு கொள்கையைப் பற்றிக்கொண்டிராமல், திறந்த மனமுடையவராய் வாழ்ந்துவந்தனர் ஆதலி னாலேயே.

உயிர்களின் உள்ளத்திற்கு அப்பாற்பட்ட உ உலகப் பொது உள்ளம் ஒன்று இருந்ததென்பதை அவர்கள் றுதியாக நம்பினர். அஃது அவர்களிடை வெறும் நம்பிக்கையன்று. நடைமுறையுட்பட்ட ஒரு நிலவர மானநாள்முறை உண்மையாதலின், அஃது இந்நாளுல கில் இருப்பதுபோல் வாரத்துக் கொருநாள், அல்லது நாளில் ஓர் ஓரை, அல்லது ஓர் இடம் பற்றி நில்லாமல் பாலில் நீர் கலந்தாற்போல் அவர்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்தது.

அவர்கள் நெற்றியில் கண்போன் றமைந்திருந்த உறுப்பைப்பற்றியும், அஃது அவர்களுக்கு ஆறாம் அறிவைத் தந்ததுடன் நாலாம் அளவையையும் அறி யக் கருவியா யிருந்தது என்பதுபற்றியும் மேலே கூறி யிருக்கிறோம். அதோடு இதே நெற்றிக் கண்ணின்