இலெமூரிய மக்களது நாகரிகம்
81
பயனாகவே அவர்கள் உலகமுற்றும் செல்லத்தகும் தொலைப்பார்வையாற்றலையும்,முக்கால உணர்வையும்
பெற்றிருந்தனர்.
இக் கண்ணின் பார்வை, முன்னால் உள்ள அண்மை சேய்மைப் பொருள்கள் நீங்கலாகப், பின், மேல், நுண்மை ஆகிய பிற நிலைகளைத் துருவி நோக் குவதாகவும் அமைந்திருந்தது.
தமிழில் அண்மைய இ என்ற சுட்டும், சேய் மையை அ என்னும் சுட்டும் காட்ட, உ என்பது முன் அல்லாத இப் பிற இடங்களையே காட்டி நிற்றலை நோக்குக. அ இ என்ற இரு சுட்டும் கட்புலப் பொருள்களைக் குறிப்ப, உச் சுட்டு மட்டும் அகக் கண்ணுக்கன்றிப் பிற கண்களுக்கு மறைக்கப்பட்ட வெளிப் பொருள்களையும் உட்பொருள்களையும் குறிக் கின்றது காண்க.
.
கடவுளின் இயல்புபற்றிய இலெமூரியர் கருத்து மிகவும் உயர்வானது. அவர்கள், கடவுள் எங்கும் நிறைந்த ஒரு தத்துவம் அல்லது உண்மை என்றும், அது நன்மை தீமை, ஆண் பெண் என்னும் இருமை உணர்ச்சியின்றிப் பொதுநிலை வாய்ந்தது என்றும், அவரது படைப்புத் தொழிலே அன்புக்கு அறிகுறி என்றுங் கொண்டனர்.
என்று
மறுபிறப்பு அவர்களுக்குக் கொள்கை சொன்னால் போதாது. வீட்டில் முன் திண்ணை, பின் னறை நமக்கு எவ்வளவு எளிய உண்மைகளோ அவ் வளவுக்கு அஃது அவர்கள் தெளிவாய் அறிந்த ஒரு செய்தி ஆகும். தம் முற்பிறப்பும் பிற்பிறப்பும் அறிந்து, உணர்வுடன் இறந்து உணர்வுடன் பிறக்கும் அத்தகைய மக்களுக்கு அது கண்கூடான உலகியல்
இ. 6