பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க.தற்கால நாகரிகமும் இலெமூரியரும்

.1

உலகியலறிஞர், உள்ள நிலைகளில் மூவகைப் பாகு பாட்டைப் பிரித்தறிகின்றனர். முதலாவது அறிவுப் பகுதி அல்லது உணர்வு நிலை; இரண்டாவது உணர்ச் சிப் பகுதி அல்லது அரை உணர்வு நிலை; மூன்றாவது உணர்வின்மை நிலை. இவற்றையே தமிழ்நூல் வல் லார் நனாநிலை,கனாநிலை, சுழுத்திநிலை எனக் கூறுவர்.

இவற்றுள் தற்கால மாந்தர் உணர்ச்சியினின்று விடுதலைபெற்று, அறிவினாலேயே உயர்வுபெற்று வரு கின்றனர். இவ் வறிவை நன்கு பயன்படுத்தக் கற்கு வ் முன் பிற விலங்கினங்களைப் போன்று மனிதனும் உணர்ச்சியினாலேயே எல்லாக் காரியங்களையும் செய் திருக்கவேண்டும்.

ஆசிரியர் ஸ்காட் எலியட், ருடால்ப் ஸ்டைனர் முதலியோர் தமது மனிதத் தோற்றக் கொள்கைக் கிணங்க, முதல் இரண்டு நில ஆக்க இயல்காலப் பகுதிகளிலும் இருந்த மக்கள் உடம்பே அற்று மூன்றாவது சுழுத்தி நிலையை ஒட்டிய முந்திய கற்பத்து உயிர்கள் என்றும், மூன்றாங் காலத்தைச் சார்ந்த இலெமூரிய மக்கள் உணர்ச்சியையே முழு ஆற்றலாகக் கொண்டவர் என்றும், அவ் உணர்ச்சி தற்கால மனிதரைவிட அவர்களிடம் கூடுதலாக இயற்கையாகவே அமைந்திருந்தபடியால் தற்காலத் தாரால் செய்தற்கு அரிய சில செய்கைகளையும் உணர்ச்சியின் உதவியால் செய்தனர் என்றும், அதன்

1 Conscious level. 2 Subconscious level. 3 Unconscious level.