பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

குமரிக் கண்டம்

பின் நான்காம் காலத்திருந்த அத்லாந்தியர் அறிவைப் பயன்படுத்தினும் அதனைத் தன்னல முறையில் ஆற் றியதால் அழிந்தனர் என்றும், ஐந்தாம் காலத்தவ ராகிய தற்கால ஆரியர் அறிவை நன்முறையில் பயன் படுத்த முயல்கின்றனர் என்றும் மனித வளர்ச்சி பற்றிக் கூறுகின்றனர்.

இன்னும், முதன்முதல் பால் பாகுபாடு ஏற்பட் டதுகூட இலெமூரியாவிலேயே என்றும், எழுத்தும் பேச்சும் அதற்குப் பிந்தி ஏற்பட்டதே என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஆசிரியர் எஸ்.கார்வே காலிபோர்னியாவி லும் பிற இடங்களிலும் கண்ட சான்றுகளால் இத் தகைய புனைவியல் தடுமாற்றங்களுக்கு இடமில்லாமல் செய்துவிட்டனர். இலெமூரியர் எழுத்து வாசனை யுடையவர். பேசத் தெரிந்தவரேயாயினும், பேச் சின்றிக் கருத்து மாற்றும் ஆற்றலும் உடையவர் என்றும், முக்கால உணர்வும் உள்நோக்கும் உடை யவர் என்றும், இவற்றின் உதவியால் தற்கால மனி தரை விட அறிவியற்கலை, கருவியாற்றல், நாகரிகம் ஆகிய பகுதிகளில் பல வழியில் முன்னேறியவர் என் றும் கொள்கிறார்.

முன் கூறிய ஆசிரியர்களின் தடுமாற்றங்களுக்குக் காரணம் அவர்கள் தாம் கண்கூடாகக் கண்ட அறி வியல் உண்மைகளையும் தமது சமயக் கருத்துக்கு ஒப்பத் திருத்தி அமைக்க முயல்வதனாலேயே என முன்னர்க் கூறினோம்.

அறிவியல் முறைப்படி வரலாற்றாராய்ச்சி வழி யில் அவர்களைப் பின்பற்றிச் சென்று பார்த்தால் இலெமூரிய நாகரிகம் மனிதரின் மிகப் பழைமையான