பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தற்கால நாகரிகமும் இலெமூரியரும்

87

நாகரிகம் என்பதும், நெடுநாள் வளர்ச்சியால் சில வகைகளில் தற்கால நாகரிகத்துக்கு ஒப்பாகவோ மிகையாகவோ காணப்படினும் பல வகைகளில் அதன் பழங் காலத்தைக் குறிக்கும் குறைபாடுக ளில்லாத தன்றென்பதும், அதற்குப் பின்னும், அத்லாந்திய நாகரிகத்திற்குப் பின்னும், மற்றும் அடிக்கடி வேறு காலங்களிலும் மனித நாகரிக வளர்ச்சியில் உயர்வு தாழ்வுகளும், மாற்றங்களும், அழிவுகளும்,புது வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன என்பதும் தெளிவா கக் காணப்படுகின்றன.

தற்கால (அஃதாவது, சிறப்பாக மேல் நாட்டு) நாகரிகத்தைவிட இலெமூரியர் சிறந்து விளங்கிய பகுதி அவர்களது வாழ்க்கை அமைதியிலேயே. அவ் உயர்வு உண்மையில் இலெமூரியாவுக்கு மட்டுமன்று; பிற்போக்கு உடையவை என்று மேல்நாட்டாராற் கருதப்படும் பழைய கீழ்நாட்டு நாகரிகங்கள் அனைத் திற்கும் பொதுவானதேயாகும். தற்கால மேல்நாட்டு நாகரிகத்தின் தன்னலமும், போட்டியுணர்ச்சியும், அழி வாற்றலும் மேம்பாடுபோலத் தோற்றினும் அவை அந் நாகரிகத்தின் அடிப்படையையே அழிக்கும் பெருந் தீங்குகளேயாகும்.

இலெமூரியரது வாழ்க்கையமைதிக்கேற்ப, இலெ மூரியரின் சமய உணர்ச்சி நடுநிலையும், நேர்மையும் உடையது. இன்று உலகில் காணப்படும் கடவுள் மறுப் புணர்ச்சியும் அவர்களிடை யில்லை. அதற்கு மாறாகக் கீழ்நாட்டாரிடை அடிக்கடி காணப்படுகின்ற கடவுள் பேராற் காட்டப்படும் வெறியும் அங்கில்லை. போலி உணர்ச்சியோ மருந்திற்கும் இருந்ததில்லை. சமயம், அவர்கள் வாழ்க்கையோடு சேர்ந்த ஒரு வாழ்க்கை