88
குமரிக் கண்டம்
அமைதி. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், இன்னும் சிறப்பாகச் சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சமய அமைதியை நாம் காணலாம்.
வாழ்க்கையிலும் இலெமூரியரிடைப் பொருளற்ற போட்டி யில்லை. அதற்கான விரைவும் விரைவும் இல்லை. மாலையில் உலாவப் போகிறவர்கள் அதற்காகக் கடற் கரை செல்ல 60 கல் விரைவில் ஊர்தியில் செல்கின்ற புதுமை இக் காலத்தது. ஒரு நாட்டில் மக்கள் முற்றி லும் கைத்தொழிலே செய்து அத் தொழிற் பயனாகிய பொருள்களை அடுத்த நாட்டார் வாங்கவேண்டு மென்று வற்புறுத்துவதும், நெடுந் தொலையிலுள்ள நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை அவற்றிற்கு மாற்றாக வாங்குவதும் இதே வகைப்பட்ட குழப்பத் தைச் சார்ந்ததே. இலெமூரியரது வாழ்க்கை, இதிலும் கீழ் நாட்டாரது வாழ்க்கையையே போன்றதாகும்.
அறிவியல் கலை வகைகளில் எல்லாத் துறைகளி லும் இன்றைய மேல்நாட்டறிவுக்கு இலெமூரியர் அறிவு ஒப்பாகமாட்டாது. ஆனால் அவர்கள் குறை பாடு பெரிதும் அழிவுத் துறை பற்றியதே என்பதும், உயர்வு ஆக்கத் துறை பற்றியது என்பதும் குறிப் பிடத்தக்கவை. வீடு நகரம் முதலியவற்றின் அமைப் புக்களிலும் உடை வகையிலும் உணவு வகையிலும் அவர்கள் உடல் நலத்தையும் இன்பத்தையும் போற் றினரேயன்றிப் பகட்டையும் ஆரவாரத்தையும் பாராட்டவில்லை.
இந்த அடிப்படையான உயிர்நிலை (ஆன்மிக) உண்மையை விட்டுவிட்டுத் தற்கால அறிவியல் நோக் குப்படி பார்த்தாற்கூட இலெமூரியர் சில வகைகளில் தற்கால மக்களைவிட முற்போக்கானவர் என்று தெரி