பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

குமரியின் மூக்குத்தி




நானும் இவரும் சிவகுமாரனும் நாகநாத ஆசாரியார் வீட்டிலேயே இருந்தோம்.

முகூர்த்தம் முடிந்தவுடன் நான் தாம்பூலம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். ஏதாவது வேணுமானால் சொல்லியனுப்பு” என்று சொக்கநாயகியிடம் சொல்லி வந்தேன். -

சாயங்காலம் ஆறு மணி இருக்கும். சுவாமிக்கு முன் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்தேன். சொக்க நாயகி வெகு வேகமாக வந்தாள். படபடப்புடன் வந்து கையைப் பிசைந்துகொண்டே, “'அம்மா, அம்மா! நீங்கள் தாம் காப்பாற்ற வேண்டும்'” என்று கவலைக் குறியோடு சொன்னாள். -

என்னடி வந்துவிட்டது?’ என்று கேட்டேன்.

"அம்மா நான் எதைச் சொல்லட்டும்? நீங்கள் முன்பு கொடுத்திர்களே, அந்த ஜடைபில்லை வேண்டும். எங்களுக்கே வேண்டும். அதன் விலை எவ்வளவு ஆனாலும் தங்துவிடுகிறேன்.”

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அந்த ஜடைபில்லை காரணமாக ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டேன். என் வயிறு பகீரென்றது.

“"என்னடி சொல்கிறாய்? நிதானமாகச் சொல்லேன்”' என்றேன். அவள் சொன்னாள்.

கல்யாணம் எல்லாம் ஆனபிறகு மாப்பிள்ளை வரதப்பன் மீனாட்சியைத் தனியே அழைத்தானம், ஏதோ பேச வேண்டுமென்று. அவள் வெட்கப்பட்டாளாம். “உன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு வா'” என்றானாம். அம்மாவுக்கும் வெட்கம். கடைசியில் நாகநாத ஆசாரியும் மீனாட்சியும் போனர்கள். '“அந்த ஜடைபில்லை எங்கே?'” என்று கேட்டான். நாகநாதருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மறைவில் இருந்தபடியே கவனித்த சொக்கநாயகி அங்கிருந்தபடியே பதில் சொன்னளாம். 'அது ஐயா வீட்