பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குமரியின் மூக்குத்தி

1

தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான். அர்ச்சகர் லலிதாஸஹஸ்ர நாமத்தைத் தொடங்கினர். பாண்டிய மன்னனுடன் வந்தவர்களில் சிலர் மட்டும் கோயிலின் அர்த்த மண்டபத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

தேவியின் மூக்குத்தி விளக்கொளியில் சுடர்விட்டு ஒளிர்ந்தது. அப்பா! அந்த ஒளியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு நிற்க முடியாது போல் இருந்தது; அத்தனை ஒளி: கண்ணக் கூசச் செய்யும் ஒளி உள்ளே அர்ச்சகர், 'ஓம் தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸூராயை நம:” (நட்சத்திரத்தினும் மிக்க ஒளி வீசும் மூக்குத்தியை அணிந்தவள்) என்ற நாமத்தைச் சொன்னர் பாண்டியனுடைய கண் அந்தச் சுடர் ஒளி ததும்பும் மூக்குத்தியில் லயிப்பதற்கும், அர்ச்சகர் அந்தத் திருநாமத்தைச் சொல்வதற்கும் பொருத்தமாக இருந்தது. பாண்டியனுக்குச் சிறிது உடம்பு குலுங்கியது. அர்ச்சகர் மேலே அர்ச்சனையை ஓட்டினார். பாண்டியனுக்கு மாத்திரம் கண் அந்த மூக்குத்தியில் நிலைத்துவிட்டது.