பக்கம்:குமாரி செல்வா.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24


காட்டக்கூடிய பெரியம்மாள்கள் யாரும் இல்லாததும் குமாரி 'தான் நினைத்த மூப்பாக’ வளர்வதற்குத் துணை புரிந்தது.

ஆடத் தெரிவதும் பாடத் தெரிந்திருப்பதுமே நாகரிகம், பெரியதனம் என்று நம்பப்படுகிற இந்தக் காலத்திலே செல்வா இவற்றைப் பயிலாமல் இருக்க முடியுமா? இவற்றுடன் நடிக்கவும் கற்றுக்கொண்டாள் அவள். இவ்வளவு சிறப்புகளுடன் அழகு, அகங்காரம், ஆணவம், அலட்சிய மனோபாவம் ஆகிய நவயுகப் பெண்மைப்பண்புகளைக் குறைவறப் பெற்றிருந்த மாடப்புறா கல்யாணம் என்ற பெயரில் எந்த வேட்ன் கையிலும் சிக்கித் தன் வாழ்வையே பாழாக்கிக்கொள்ள விரும்பாததில் அதிசயமில்லை.

அபாரத் தன்னம்பிக்கையுடன் முன்வந்து அவளை யாராவது கல்யாணம் செய்திருந்தால், அவன் உருப் பட்டுவிடமாட்டான்! அவனையும் அவன் வாழ்வையும் உருப்படவிடாமல் அடிக்கும் திறமை அவளிடமுண்டு.

அவளிடம் குடிகொண்டிருந்த திறமைகளை யெல் லாம் சோபிக்கச்செய்து புகழுடன் மிளிரவேண்டும் என்ற ஆசைதான் அம்மாளுக்கும் மகளுக்கும் அதிகம்.

சின்ன் வயசிலிருந்தே 'செல்வா சிரித்த முகமும் சீதேவியுமாக எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகு கிறாள்’ என்ற பாராட்டுதலைப் பெற்று வளர்ந்தவள் அவள்.

குறும்புகள் செய்வதில் அவள் யாருக்கும் சளைத்தவ ளில்லை. பையன்கள் நோட்டில் ’நீ ஒரு கழுதை-இப்படிக்கு செல்வா’ என்று கையெழுத்திட்டு ஸர்டிபிகேட் அளிக்க அவள் தயங்கியதே கிடையாது. அவள் பின்னின்று எவனாவது பின்னின்று இழுத்தால், அவன் கண்களில் தண்ணிர் வரும்படியாக மண்டையிலே ’நறுக்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/26&oldid=1315668" இலிருந்து மீள்விக்கப்பட்டது