பக்கம்:குமாரி செல்வா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30


சிரிப்பு சிரித்தாள் அவள். அவ்வளவுதான் ! அவனைத் தீர்த்துக்கட்டிவிட்டது அந்தச் சிரிப்பு. இனி அவன் அவள் அடிமைதான்.

அவன் பரபரப்புடன் சொன்னான் : இல்லை, செல்வா. நீங்கள் சினிமா நட்சத்திரம் ஆகவேண்டும். அதே போல் நடனக்கலையுலகில் தனியொளிச் சந்திரனாகத் திகழவேண்டும்.’

’அது தானே கேட்டேன் என்று சொல்லிச் சிரித்தாள் அவள்,

வீடு வந்து சேர்ந்ததும் காரிலிருந்து குதித்திறங்கிய குமாரி ’ரொம்ப தேங்ஸ். இன்னொரு நாள் ஈவ்னிங்லே வாங்க, மிஸ்டர் ராஜ், காபி டிபன் எல்லாம் சாப்பிட்டு விட்டுப் பேசலாம்’ என்று சொன்னாள்.

’ஒ!' என்று மகிழ்வுக்குரல் கொடுத்த ராஜா உற் சாகமாகச் சொன்னான் ’உங்களுக்கு ஆட்சேபணை யில்லையென்றால், ஏதாவது சினிமா பார்க்கப் போகலாம் ? என்று.

‘ஒ யெஸ். செய்தால் போச்சு!' எனக்கூறிக் களுக் குச் சிரிப்பு சித்திவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டே வீட்டினுள் சென்றாள் அவள்.

அவள் போகும் அழகையே கவனித்து மயங்கி யிருந்த ராஜா பெருமூச்செறிந்து விட்டு காரை ஒட்டிச் சென்றான்.

குமாரி சொல்லிய ’இன்னொரு நாள் ஈவ்னிங்’கை காலவறையரையில்லாமல் ஒத்திபோட விரும்பாத ராஜா மறுநாள் மாலை மூன்றரை மணிக்கே வந்து சேர்ந்துவிட்டான் செல்வாவும் அவள் தாயும் மகிழ் வுடன் வரவேற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/32&oldid=1315691" இலிருந்து மீள்விக்கப்பட்டது