பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#60 குமுக வாசகம்

போரிட விடுத்தான். அவன் பாண் டியன் அடித்த இரும்புத் தண்டால் பெண்பன்றியின் தலையில் ஓங்கி யடிக்க அப்பெண்பன்றியும் இறந்தது.

12. தம் பெற்றேர்கள் இறந்ததை உணர்ந்த குட்டி கள்பட்ட துயரைச் சொல்விமுடியாது. இங்கும் அங்கும் ஓடின. தாய்ப்பால் பருக விரும்பி வாடின. வெயில் வருத்தியதால் மெலிந்தன. இவற்றின் கிலேகண்ட ஆலவாய் அண்ணல், மிகவும் இரக்கம்கொண்டு, அவற் நிற்கு அருள்செய்யத் தாமே தாய்ப்பன்றியாக அவற் றின் அருகே வந்தார். தாய்ப்பன்றியைக்கண்ட பன்றிக் குட்டிகள் ஆனந்த முற்றுக்கிட்டிமுட்டின : சுற்றிலும் மொய்த்துக்கொண்டன: முதுகில் பாய்ந்து ஏறிக்கொண்; டன: குதித்தன. இங்கும் அங்கும் ஓடின. இறைவன் இவற்றிற்கு மேலும் கருணை செய்ய அப்பன்றிகளை மானிட உருவமாக மாற்றினன். ஆனல், அவற்றின்முகம் மட்டும் பன்றியின் முகமாக இருந்தது. அவை மானிட உடல் பெற்றதற்கு ஏற்ப ஒழுங்கும் கல்வியும் பெற்றுச் சிறந்த அறிவுடையனவாய்த் திகழ்ந்தனர். எல்லார்க் கும் முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருளும் உண்டோ!

13. மானிட உருவினைப்பெற்ற இப்பன்றிகள் பன் னிரு ஆதித்தர்போலப் பேர்அழகுடன் பல்கலையுணர்ந்த செல்வராய மலேயில், வாசம் செய்து வந்தனர். இப்படிப் பரமன்செய்த அருள் திருவிளையாட்டைக்கண்ட மீனட்சி யம்மையார் ஐயா! நீர்மலத்தையுண்டு மலத்தில் புரண்டு சேற்றில் கிடக்கும் பன்றிகட்கு நீரே, தாய்ப்பன்றியாகி அருள் சுரந்ததோடு நில்லாமல், அவற்றை மானிடராக அம்செய்துவிட்டீரே. இதற்குக் காரணம்என்ன?" என்று ஆசின்னள். அதற்கு விடையாகஇறைவன் பெண்ணே