பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு மு த வ ச க ம

1. தேசீயக் கொடி

1. அரசர்களுக்குரிய அங்கம் பலவற்றுள் தசாங்க மும் ஒன்று. தசாங்கமென்பது பத்து உறுப்புக்கள் என்று பொருள்படும். அவை பேர், காடு, நகர், ஆறு, மலே, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்பன. ஏனைய உறுப்புக்களைப் பற்றி க்ாம் இங்கு இப்பொழுது சிந்திக் காமல் கொடியைப் பற்றி மட்டும் சிந்திப்போமாக.

3. தெய்வங்கட்கும் சிறப்புடைய பெருமக்களுக் கும் தனித்தனிக் கொடிகள் உண்டு. சிவபெருமானுக்கு இடபக் கொடியும், திருமாலுக்குக் கருடக் கொடியும், பிரமனுக்கு அன்னக் கொடியும், இந்திரனுக்கு இடியும் மின்னலும் கலந்த கொடியும், கரும ராஜருக்கு முரசக் கொடியும் அர்ச்சுனனுக்கு அனுமன்கொடியும், துரியோ தனனுக்குப் பாம்புக் கொடியும் இருந்தனவாக நூல்கள் கூறுகின்றன. சேர சோழ பாண்டிய காடுகளில் தனியரசு செய்து வந்த முடியுடை மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களுக்கும் தனித் தனிக் கொடிகள் உண்டு. சேரருடைய கொடியில் வில் எழுதப்பட்டிருக்கும். சோழருக்குரிய கொடியில் புலி பொறிக்கப்பட்டிருக்கும். பாண்டியருடைய பதாகையில் மீன் தீட்டப்பட். டிருக்கும்.