பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 குமுத வாசகம்

அன்பாற் பகைவரிடமும் அவாவின அடையலாம் பகைசேரும் எண்ணுன்கு பற்கொண்டே கன்ன வகைசேர் சுவையருந்து மாபோல்-தொகைசேர் பகைவரிடம் மெய்யன்பு பாவித் தவரால் சுகமுறுதல் கல்லோர் தொழில். 2 பாம்பினும் கொடியர் துட்டர் துர்ச்சனரும் பாம்பும் துலேயொக்கினும், பாம்பு துர்ச்சனரை ஒக்குமோ, தோகையே துர்ச்சனர்தாம் எந்த விதத்தாலும் இணங்காரே, பாம்புமணி மந்திரத்தால் ஆமே வசம். 3

தனித்துண்ணல் தாழ்வானது தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்லிவரோ டின்புறத்தான் உண்டல் இனிதாமே-அன்புறவே தக்கவரை இன்றித் தனித்துண்டல் தான்கவர்மீன் கொக்கருத்தல் என்றே குறி. 会 சபைக்கு அழகு கற்றவனே

கல்லார் பலர் கூடிக் காதலித்து வாழினும் நூல் வல்லான் ஒருவனேயே மானுவரோ?-அல்லாரும் எண்ணிலா வான்மீன் இலகிடினும், வானகத்தோர் வெண்ணிலா ஆமோ விளம்பு? 莎

இந்நூல் ஆசிரியர் யார் என்பது அறுதியிட்டு உறுதி யாகக் கூறுதற்கு இல்லை. திேமுறைகளை வெண்பாவால் பாடப் பட்டிருத்தலின், இந்நூல் நீதிவெண்பா எனப் பெயர் பெற்றது.

அருஞ் சொற்கள் : 1. சவாம் - சாமரம், எள்ளார் இழிவுக்காகக் கருதமாட்ட்சர் மரு - மணம், 8. துலை - தராசு