பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியக் கொடி §

பச்சைப்பட்டையில், இடப்பக்கம் சூரியனும், வலப் பக்கம் பிறைமதியும் திகழ்ந்தன.

5. இவ்வாறு 1906 ஆம் ஆண்டு அமைந்த கொடி, 1931 ஆம் ஆண்டு சிறிது மாறுதல் அடைந்தது. மேலே வெண்ணிறம் பெற்றது. இடையே பச்சை நிறம் அமைந்தது. கீழே செம்மை நிறம் பொருந்தப் பெற். றது. இடையில், அதாவது பச்சை நிறத்தில் நூல் நூற்கும் கருவியாகிய இராட்டை உருவம் பொறிக்கப் பட்டது. இம் முறையில் இக் கொடியை அமைத்தவர் உலகம் புகழும் உத்தமராகிய மகாத்மா காந்தியடிகள் ஆவார். இங்ஙனம் அமைந்த கொடியும் 1981 ஆம் ஆண்டு மேலும் சிறிது மாறுதலைப் பெற்றது. அதாவது மேலே காவி நிறமும் இடையில் வெண்மை நிறமும், ஈற்றில் பசுமை கிறமும் அமைந்து விளங்கியது. ஆனல், இராட்டை உருவம் மட்டும் இடையில் வெண்மை நிறத்தில் அமைந்தே இருந்தது. இவ்வாறு அமைந்த கொடியேதான் இப்பொழுது இராட்டை நீங்கப்பெற்று அசோகர் சக்கரத்துடன் விளங்கி வரு கிறது.

.ே இனி கம் சுதந்தரக் கொடியில் உள்ள மூன்று கிறங்களும் எக்நோக்கத்துடன் அமைந்திருக்கின்றன என் பதையும் உணர்வோமாக காவி நிறம், தைரியத்திற்கும் தியாகத்திற்கும் அறிகுறி என்றும், வெண்மை கிறம் உண்மைக்கும், அமைதிக்கும் அடையாளம் என்றும், பசுமை கிறம் அன்புக்கும், ஆற்றலுக்கும் எடுத்துக் காட்டு என்றும் விளக்கம் கூறுகிருர்கள். இவ் விளக்கம் மிகமிகப் பொருத்தமானதே.