பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊彰 குமுத வாசகம்

ஞர். ஞானியாரால் ஆளப்படும் அரசைப் பற்றி ஏதே அனும் குறை கூறமுடியுமா? இவரது அரசாட்சி மிகவும் சிறப்புடையதாக இருந்தது. இவரிடம்வீரமும் இருந்தது; ஈரமும் இருந்தது. வீரம் காரணமாகப் பல அரசர்களே வென்று தம் காட்டுடன் அவ்வரசர்களின் காடுகளே இணைத்துக் கொண்டு, தம் பாலஸ்தீனம் பெரு நாடாக விளங்கும் வண்ணம் அரசு புரிந்து வந்தார். பாலஸ் தீனத்திற்குத் தலைநகராக விளங்கிய ஜெரூஸலத்தில் அரண்மனே வகுத்துத் திறமையுடன் திேசெலுத்தி வங் த்ார். இவர் நீதி ஒரவஞ்சனேயின்றித் துலாக் கோல் போல் இருந்தது. தம் அரசில் பொறுக்க வேண்டிய வர்களேப் பொறுத்தும், ஒறுக்க வேண்டியவர்களே ஒறுத் தும் செங்கோல் புரிந்து வந்தார். தம் கல்லரசு தம் மோடே போய்விடாமல், தமக்குப் பின் வருபவர்களும் இதன்படி கடக்கவேண்டும் என்பதற்காகவும், மக்களும் ஒழுக்கம் தவருது நன்முறையில் கடக்க வேண்டும் என் வதற்காகவும், பரந்த நோக்கம் கொண்டு, நீதி மொழி கள் என்னும் நூலேயும் எழுதி உதவினர்.

4. வீரத்திற்கு இந்தப் பணிகளைச் செய்தவர் ஈரத்திற்குச் சிறந்த தொண்டு புரிய வேண்டவா? தம் காட்டுத்தலே நகராகிய ஜெரூஸலத்தில் ஒரு பெரிய ஆல யத் திருப்பணி செய்து வைத்தார். மக்கள் கடவுள் அன்புடையவராய் இருத்தல் வேண்டும் என்பது அவரு டைய அவா. ஆண்டவனே அன்புடன் பாடி ஆராதிக் கவும் உத்தம கீதங்கள் என்னும் நூலையும் இயற்றியருளி ஆர். இப்படியல்லவோ மன்னர்கள் இருக்க வேண்டும்: :ன்னர் பொருட் செல்வம் மட்டும் பெற்றிருந்து யாது பயன்? அவர்களிடத்தில் கல்விச் செல்வமும் இருத்தல் வேண்டும். அருட்செல்வமும் அமைதல் வேண்டும்.