பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடை அரசர் £3

யில் வாங்கி மூக்கால் முகர்ந்து பார்க்கும்வரை இயற்கை என்றே கூசாது கூறி விடுவர்.

8. இந்த மாலைகளைக் கையில் கொண்ட ஷிபா அம்மையார் சாலமன் மன்னரைக் கண்டனர். கண்டு அரசரைப்பார்த்து, ம ன் ன ரே கான் மாலே களேக் கையில் வைத்திருப்பதை நீர் பார்க்கின்றீர். ஆனல், இவற்றுள் ஒன்று இயற்கைமலர்களால் ஆனது. ஏனையது செயற்கைமலர்களால் இணைக்கப்பட்டது. ஆகவே, இவ்விரண்டு மாலைகளுள் எது இயற்கைமாலை? எது செயற்கைமாலே? செப்பும்!” என்று அன்புடன் வின வினர்.

9. சாலமன் மாலைகளே உற்று உற்று நோக்கினர். உண்மையில் அவருக்கு இரண்டும் இயற்கைமாலே களாகவே காணப்பட்டன. எதை இயற்கை என்பது; எதைச் செயற்கை என்பது என்று அறிந்து கொள்ளச் சிறிது சிந்திக்கவேண்டியவராய் விட் டார். மாலையைக் கையிலும் வாங்கிப்பார்க்கக்கூடாது. அரசர் இருந்த இடத்திலிருந்தே உரைக்கவேண்டும். சாலமன் மன்னர் நுண்ணறிவு படைத்த ஞானியார் என்பது நாம் அறிந்த உண்மையல்லவா ?

10. இவர் அரண்மனைக்கு முன்னல் தோட்டம் இருந்தது. அத்தோட்டம் மாஞ்செடிகள் நிறைந்து நல்லமலர்களைப் பெற்று வண்டுகளுக்குப் பெருவிருந்து அளித்துக் கொண்டிருந்தது. ஆகவே, பணியாட்களே ஏவித் தோட்டத்திற்கு கேரேயுள்ள சன்னல் கதவுக்ளேத் திறக்குமாறு கட்டளையிட்டார். வேலேயாட்களும் அவ் வாறே செய்யத் தோட்டத்திலிருந்த சுரும்பினங்கள் வ:பா அம்மையார் பிடித்திருந்த இயற்கை மலர்