பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது கேளிக்கைப் பிரயாணம் 2?

தைக் கேட்குக்தோறும், காணுந்தோறும் வியக்காமல் இருக்க முடியவில்லே.

4. இவ்வைந்து கற் கோயில்களுள் பெரியதாய் இருப்பதைத் தருமர் கோயில் என்கின்றனர். இது மூன்றுவாயில் கிலைகளைக் கொண்டது. இதில் காணப் படும் ஒவியத்திறனைச் சென்று கண்டால் அன்றி, எழுத்

தால் எழுதி விளக்க இயலாது. இரண்டாம் அடுக்கின் கடுப்பாகத்தின் கீழ்ப்பகுதியில் பார்வதி பரமேஸ்வரர் குமாரக்கடவுளோடு வீற்றிருக்கும் முறையில் ஒரு விக்கி கம் செதுக்கப்பட்டிருக்கிறது. இதனைச்சோமாஸ் கந்த மூர்த்தி என்கின்றனர். தருமர் இரதத்திற்கு அடுத்தாற். போல் இருப்பது பீமாதம். அதற்கும் அடுத்தபடி உள்ளவை காண்டீபன் தேரும்,பாஞ்சாலியின் இரதமும் ஆகும். இங்குக் கரியின் உருவமும், அரியின் வடிவமும் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். திரெளபதியின் இரதம் என்பது துர்கையின் கோவிலே அன்றி வேறன்று.