பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெகதீஸ் சந்திரபோஸ் 魏了

'ஏழைக்குச் சோறு போட்டான் நான்காம் வேற். அமை உருபு கு' இருப்பது உங்களுக்குத் தெரிகிறதல் லவா ? இவ்வுருபுக்குக் கொடை, பகை முதலியபொருள் கள் உண்டு.

பயிற்சி :

1. இப்பாடத்திலிருந்து முதல்வேற்றுமை இாண் டாம் வேற்றுமை, மூன்ரும் வேற்றுமை, நான் காம் வேற்றுமை உருபுகளை ஏற்ற சொற்களுக் குத் தனித்தனி நான்கு உதாரணங்களே எடுத்துக் காட்டி, அவை எக்கப் பொருளில் வந்துள்ளன என்பதையும் குறிப்பிடு.

7. ஜகதீஸ் சந்திரபோஸ்

1. நம் நூல்கள் பிறப்பு வகையை ஏழாகப்பிரித் துக் கூறுகின்றன. அவை தேவர் மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன. "எழுபிறப்பும் தீயவை தீண்டா” என வள்ளுவரும் கூறி யுள்ளார். ஊர்வன என்பன பாம்பு, பல்லி முதலியன. நீர்வாழ்வன தவளை, மீன், முதலே முதலியன. பிற பிறப் புக்களைப் பற்றிக் கூறவேண்டுவது இல்லை. அவை உங்கட்கு நன்கு தெரிந்தவையே. -

2. இப்பிறவிகளின் அறிவு ஒருப்படித்தாக இல்லை. பலவகையாக உள்ளன. தாவரங்கட்கு மெய் உணர்ச்சி யாகிய ஊற்ருல் அறியும் அறிவும், கத்தை, சிப்பி முத லியவற்றிற்கு மெய்யறிவுடன் காவறிவாகிய சுவையறி வும், கறையான், எறும்பு முதலியவற்றிற்கு மெய்,