பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翻 குமுத வாசகம்

பெரிதும் பரவலாயின. இவருடைய பரந்த இயற்கைத் தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியைக் கண்டு வியந்த லண் உன் சர்வ கலாசாலே, டாக்டர் ஆப் சைன்ஸ் என்னும் பட்டமாகிய டி. எஸ்ளி. என்னும் பட்டத்தையும் தந்து கெளரவித்தது. இவரை இவ்வாறு ஊக்கப்படுத்தவே: இவர் தம் ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளைத் தாமே செய்யவும் தலைப்பட்டார். இவரை ஒரு சமயம் வெள் ளேயர் நோக்கி இக் கருவிகள் எங்குச் செய்யப் பட்டன; இவ்வளவு நுட்பமாகவும் உள்ளனவே!" என்று கேட்டபோது, இவை என் தாய் காட்டில் செய் யப்பட்டன” என்று விடை இறுத்தாராம். இதனுல், இவருக்கு இருந்த காட்டுப்பற்று வெளியாகிறதல்லவா ? மின்சார அலைகளைப்பற்றி ஆராய்ந்தவர் மூவர். ஒருவர் இங்கிலீஷ்காரர், இன்ைெருவர் அமெரிக்கர், மூன்ருவது அறிஞர் நம் இந்தியரான போஸ் பெரியார். இம்மூவரும் செய்த மின்சார அலைகளின் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றவர், கம்போஸ் பேரறிஞர் என்க. இது ஈமக்கு ஒரு பெருமை அல்லவா?

6. போஸ் கண்ட ஆராய்ச்சிகள் தாவரங்கட்கும் விலங்குகட்கும் நரம்புத் தொடர்பு ஒன்று என்பது: மரத்து வாழ்க்கையும் மனித வாழ்க்கை போல ஒத்துக் காணப்படுகின்றது என்பது; மரங்களும் உறங்குகின்றன: விழித்துக் கொள்கின்றன என்பது முதலியன. இவர் கண்ட முறைப்படி மரங்கள் இரவு பன்னிரண்டு மணிக் குத் தாங்கத் தொடங்குகின்றனவாம். மீண்டும் காலே எட்டு மணிக்கு எழுந்து கொள்கின்றனவாம்.

7. மரங்கள் உறங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியவேண்டுமானல், தூங்குமூஞ்சி மரம் என்று ஒரு