பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨轟 குமுத வாசகம்

பாரா? ஆகவே, 1909-ஆம் ஆண்டு பிப்பிரவரித்திங்கள், 15ஆம் நாள், இவரும் இவர் குழுவினருள் எழுவருட ஆறும், எஸ்கிமோக்களில் 95 பேர்களுடனும், 150 காய் களுடனும், 28 சகடங்களையும்கொண்டு தம்பயணத்தைத் தொடங்கினர். இவர்கள் தம் கைவசத்தில் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப்போதுமான உணவுப்பொருள் களைக்கொண்டிருந்தனர். அன்னமயம் பிராணமயம் அல் லவா? அன்னம் ஒடுங்கில்ை அனைத்தும் ஒடுங்கிவிடுமே. ஆகவே, உணவையும் உடன்கொண்டு சென்றனர்.

8. இவர்கள் கடந்து செல்லவேண்டிய பிரதேசம் பனி உறைந்த பிரதேசம். அப்பனியிலேயே போய்க் கொண்டிருந்தனர். சென்றவர்களுள் சிலர் கை கால் ஒடிந்தனர்:சிலர் நோய்வாய்ப்பட்டனர்.அவர்களே.மேலும் அழைத்துப் போதல் அடாதென எண்ணிய பியரி, அவர் களேத் திரும்பித் தாம் புறப்பட்ட புதிய இடமாகிய கிரா மத்தை அடைய ஏற்பாடு செய்து விட்டனர். கடைசி யில் இவருடன் நின்றவர் நான்கு எஸ்கிமோக்களும், அவருடைய பணியாளன் ஹென்ஸன் என்பவனும் ஆவர். நாற்பது நாய்கள் உடன் இருந்தன. வண்டிகள் பல கிலமாகிப்போக, நல்ல கிலேயில் இருந்தவை ஐந்தே யாகும். பலர் திரும்பிவிட்டதால் உணவு மிகுதியும் செலவாகாமல், ஏறக்குறைய காற்பது நாட்களுக்கு வரக் கூடிய அளவுக்கு மிகுந்துஇருந்தது. இவ்வாருன கட்டத் துடன் ஒரு மாதகாலம் பயணப்பட்டு, முந்நாற்றுப்பதி னேழு மைல்களேக்கடந்தனர். இன்னமும்கடந்து வடதுரு வமண்டலத்தைக் காணவேண்டிய தொலைவு நூற்று முப்பத்துமூன்று மைல்களாகும். இக்கத் தூரத்தை வெகு சிரமப்பட்டுக்கடக்க வேண்டி இருந்தது. தொடர்ந்து: