பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு இயக்கம் 77

வதங்கி, உணவு நெருக்கடி ஏற்பட்டுக் குடியானவர் களும், பொதுமக்களும் அல்லலுறுவதைக் கண்கூடாகக் கண்டார். குடியானவர்கள் பட்ட இடுக்கண் சைபீஸின் உள்ளத்தை வருத்தியது. அவர்கட்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டு, அவர்கள் நல்வாழ்வு எய்துதந்து முயல்வாரானர். அம்முயற்சியின் பயனே கூட்டுறவு இயக்கமாகும். அவர் கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத் திப் பல அங்கத்தினர்களைச் சேர்த்து, அதில் சொற்ப முதலைக் கொண்டு, தானியங்களையும் காய்கறி கிழங்கு வகைகளையும் வாங்கி அங்கத்தினர்களாக இருப்பவர் கட்கு இலாபம் கருதாது விற்று வந்தார். கால் கடை களே வாங்கி ஏழைக்குடியானவர்கட்கு விற்று வந்தார். கால்நடைகளை வாங்குவதற்குப் பணத்தைக் கடனுகக் கொடுத்துதவச் செல்வர்களின் உதவியை நாடிஞர். இக் செல்வர்கட்கும் குடியானவர்க்கும் இடையில் சங்கத்தை உத்தரவாதமுள்ளதாகப் பொறுப்பினேக் காட்டினுள். பணத்தைச் செல்வந்தரிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி உதவி வந்தனர். இதல்ை, குடியானவர்கள் அடைந்த நன்மை அனந்தமாகும். இவ்வாறு பணம் கொடுத்து உதவி வருவது குறித்து ஒருசட்டம் 1863-ஆம் ஆண்டு வகுக்கப் பட்டது. அச்சட்டம் சங்கத்தில் கடன் பெரும் வர்களின் கூட்டு உத்தரவாதம் என்னும் கூட்டுறவு விதி யாகும். இக் கூட்டுறவு முறையில்ை அளக்க ஒண்ணுத பயன்கள் ஏற்பட்டதல்ை, உலகெங்கும் இவ்வியக்கம் தோன்றலாயின. ஸாக்ஸனி மாகாணத்தில் டெலிட்ஷ் என்னும் சிறிய பட்டணத்தில் பிறந்த ஷூல்ஸ் என்பவர் புலசங்கங்களை நிறுவினர். ரஷ்யாவிலும், ஆஸ்திரேலி யாவிலும், பிரான்ஸிலும், ஜப்பானிலும் எண்ணிறந்த கூட்டுறவுச் சங்கங்கள் எழலாயின.