பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோத்திரப் பாக்கள்

தேவாரம் பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை: ஆவினுக் கருங்கலம் அரசனஞ் சாடுதல்; கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது; காவினுக் கருங்கல்ம் நமச்சி வாயவே. f -திருநாவுக்கரசர். பிரபந்தம் குலந்தரும்; செல்வங் தந்திடும்; அடியார்

படுதுய ராயின எல்லாம் நிலந்தரம் செய்யும்; நீள்விசும் பருளும்; அருளொடு பெருகிலம் அளிக்கும்: வலந்தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற தாயினும் ஆயின செய்யும்; கலந்தரும் சொல்லே நான்கண்டு கொண்டேன்

நாராயணு என்னும் காமம். 岛 -திருமங்கையாழ்வார். திருப்புகழ் . பத்தியால் யானுனைப் பலகாலும்

பற்றியே மாதிருப் புகழ்பாடி

முத்தன மாறெனப் பெருவாழ்வின்

முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமாதானசற் குணர்ந்ேயா!

ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா!

வெற்றிவே லாயுதப் பெருமாளே ! 3. -அருணகிரிநாதர்,