பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தைரிய நாதர்

1. தமிழ் மொழி தமிழர்களை மட்டும் இன்பத் தல ஆழ்த்தவில்லை. தமிழர் அல்லாதவர்களையும் இன் பத்தில் அழுந்த வைத்திருக்கிறது. அப்படி அழுந்திய வர்களுள் ரெவரெண்டு பெஸ்கி என்னும் இத்தாலிய தேசத்து அறிஞரும் ஒருவர் ஆவார்.

3. ரெவரெண்டு பெஸ்கிப் பெரியார் வட இத் தாலி தேசத்தில் வெனிஸ் நகருக்கு மேற்கே காஸ்டிக்கிலி பாணி என்னும் பட்டினத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் கி. பி. 1660-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிறந்தார். இவரைப் பெற்ருேர்கள் கண் னும் கருத்துமாய் வளர்த்து வந்தனர்; இவரை ஆரம் பப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். அப்பள்ளி யில் லத்தின், கிரீக் மொழிகளே இவர் பயின்று வந்தார். இவருக்கு இளம் பருவ முதலே கல்வியில் மிகவும் ஆர் வம் இருந்தது. அதல்ை, பள்ளிக்கூடத்திற்குக் காலங் தவருமல் போய்வந்தார் , ஆசிரியர் கூறியதை உற்றுக் கவனித்து வந்தார். இந்த கற்பழக்கம் இளமை முதல் இவரிடம் இருந்து வந்ததால், இவர் எல்லோராலும் நன்கு பாராட்டப்பட்டுப் படிப்பில் ஒவ்வொரு வகுப்பி லும் முதன்மையாகத் தேர்ந்து வந்தார். ஆரம்பப் பாட சாலையில் படிக்கவேண்டியவற்றை எல்லாம் படித்து முடித்துவிட்டுக் கலாசாலையை அடைந்து, மேல் படிப்புப் படிக்கத் தொடங்கினர். இவருக்கு இளமை முதல் கல்வியில் ஏற்பட்ட பற்றைப் போலவே, தாம் பிறந்த கிறிஸ்து மதத்தில் பெரும் பற்று வாய்ந்தவராய் இருக் தார். அம்மதத்தை எங்கும் பரவச் செய்ய எண்ணமுங்