பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4

.ே 'அறிவுடை ஒருவனே அரசும் விரும்பும்” என் பது நம் நாட்டுப் பழ மொழியல்லவா ? வீரமாமுனிவ ருடைய அறிவையும் ஆற்றலேயும் கண்ட சந்தா சாகிப் இவரை வரவழைத்துத் தம் ஊரிலேயே இருக்கச் செய்து, மந்திரிப் பதவியையும் கொடுத்தனர். பதவி கொடுத்ததோடு நில்லாமல் தமக்குச் சொந்தமான திருச்சி ஜில்லாவைச் சார்ந்த பொக்கலம், அரசூர், மால் வாய், நல்லுர் முதலிய ஊர்களேயும் இனமாகத் தந்தார். இவ்வளவு சீரும் சிறப்பும் பெற்ற போதும் தம் துறவுக் கோலத்தை மட்டும் இவர் விட்டிலர். இவ்வாறு முஸ்லீம் மன்னர் தந்த பொருளேக் கொண்டும் தம் கைவசம் இருந்த செல்வத்தைக் கொண்டும் தமிழ் நாட் டில் கல்வி பரவுவதற்கு உதவி புரிந்தார்.

7. வீரமாமுனிவர் ஒய்ந்த நேரங்களை வீணுக்குவ தில்லை. தமிழ்மொழியையே நன்கு படித்து வந்தார். இவருக்குத் திருக்குறள், சீவகசிந்தாமணி, கம்பராமா யணம் முதலான நூல்களில் நல்ல பயிற்சியுண்டு, அப் பயிற்சியைத் தமிழ்த் தாய்க்கே பயன்படுத்தினர். தம்மத சம்பந்தமாக ஒரு காவியம் இருத்தல் நலம் எனக் கருதித் தேம்பாவணி என்னும் சீரிய காவியத்தைப் பாடி முடித்தார். இது இயேசுப் பெருமான் வரலாற்றை ஆதியோடந்தமாகக் கூறும் நூல் : கற்போருக்குக் கழி பேர் உவகை கொடுக்க வல்லது. பொழுது போக்குக் காகவும் இன்பம் எய்தற் பொருட்டாகவும், பரமார்த்த குருகதை என ஒரு நூலேயும் எழுதினர். இதைப் படிக்கப்படிக்க விடா நகைப்பு ஏற்படும். தமிழ் இலக் கணங்கள் எல்லாம் பாட்டு வடிவில் உண்டு. ஆனால், இவர் அவ்விலக்கணத்தை உரை நடையில் எழுதி அதற் குத் தொன்னூல் விளக்கம் என்னும் பெயர் கொடுத்தார்.