பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

பயிற்சி

1. நான்கு சைவ சமயாசிரியர்களைக் குறிப்பிடு. 2. பசிவந்திடப் பத்தும் பறக்கும் ” என்னும் அடியால்

குறிக்கப்பட்ட பத்தினையும் எடுத்துக் காட்டு. 3. சுந்தரர் வரலாறு, சேரமான் பெருமாள் நாயனுர்

வரலாறு கூறும் நூலேக் குறிப்பிடு. 4. பாமாலையாக உள்ள ஒரு நூலைக் குறிப்பிடு.

இலக்கணம்

நிறுத்தக் குறிகள்

ஒரு வாக்கியம் முடிந்து விட்டது, முடியவில்லை என்பதை, அவ்வாக்கியத்தின் ஈற்றில் இடப்படும் குறிகளைக் கொண்டுதான் உணரமுடியும். அப்படி இடக் கூடிய குறிகள் கீழ்வருவன.

இது முற்றுப் புள்ளி ? இது கேள்விக் குறி ! இது உணர்ச்சிக் குறி

வாக்கியம் முடிந்த இடத்தில் முற்றுப்புள்ளியை இட வேண்டும்.

(உ-ம்) அவன் போனன்.

கேள்வி கேட்கும்போது அவ்வாக்கியத்தின் ஈற்றில் கேள்விக் குறியை இடவேண்டும். (உ-ம்) அவன் போனுளு ?

ஆச்சரியம், பரிதாபம் முதலிய உணர்ச்சிகளை வெளிப் படுத்தும்போது உணர்ச்சிக் குறியை அமைக்க வேண்டும்.

(உ-ம்) ஆ இம்மலரின் அழகே அழகு!

ஐயோ! கீழே விழுந்து விட்டாரே!