பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0

வருமாறு தந்தியும் அனுப்பினர். ஆறுமுகம் தந்தியைப் பார்த் ததும், இனி தாமதிக்கக் கூடாது என்று எண்ணியவனுய்ப் புறப்பட்டுப் போக ஆயத்தப் படலானன்.

1. ஆறுமுகம் செவிடன் என்பது முன்பே கூறப்பட்ட தல்லவா? ஆகவே, அவன் 'கம் மாமனரிடம் எப்படிப் பேசுவது அவர் நோய் கொண்டிருப்பதால் மெல்லப் பேசு வாரே. நமக்கோ காது சரியாகக் கேட்காதே. நாம் அவர் கேட்கும் கேள்விகட்கு விடைகூருது இருந்தால், பார்த் தனேயா, நாம் சொல்லும் வார்த்கைளுக்குப் பதில் கூருமல் இருக்கின்றன். இவன் மகா கர்வி என்று அல்லவோ கினைத்து விடுவார்? அவர் கேட்கப் போகும் கேள்விக் குரிய விடையை இங்கேயே யோசித்துக் கொள்ள வேண்டும் " என்று எண்ணிக் கீழ்வருமாறு தீர்மானித்துக் கொண்டான்.

8. நாம் 'மாமா உடம்பு எப்படி இருக்கிறது!" என்று கேட்போம். அவர், சிறிது சுமாராக இருக்கிறது", என்று கூறலாம். அப்படியா சந்தோஷம் என்று கூறுவோம். அடுத்தபடி மாமா உங்கட்கு யார் வைத்தியம் பார்ப்பவர்? என்று கேட்போம். அவர் சிறந்த மருத்துவர் பெயரைக் குறிப்பிடுவார். நாம் உடனே, மாமா! அவரையே பார்க் கச் சொல்லுங்கள். அவர் சிறந்தவர்தாம். நானும் கேள் விப் பட்டிருக்கிறேன் என்று கூறுவோம். அடுத்தாற்போல் என்ன ஆகாரம்சாப்பிடுகிறீர்! என்று கேட்போம். அவர் தம் உடம்புக்கும் வாய்க்கும் ஏற்ற உணவு உண்பதாகக் கூறுவார். நாம் உடனே மர்மா அதுதான் நல்லது. அதனை விடாமல் சாப்பிட்டுவாரும் என்று கூறலாம். இதற்குமேல் அவரிடம் ஒன்றும் பேசக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு திருவிடைமருதுருக்குப் புறப்பட்டு மாமர்ை வீட் டையும் அடைந்தான் ஆறுமுகம்.