பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

வைராக்கியத்தால் மீண்டும் பல வீரரைக்கொண்டு குரு மண்டலத்தைத் தாக்கினன். ஐயோ அலிப்கான் எண்ணம் அப்பொழுதும் பலிக்கவில்லை. அந்த முறையும் அவனுக்கு அஜயமே கிடைத்தது. அலிப்கானுக்குத் துக்கம் பொறுக்க முடியவில்லை. அவனுக்கு இரு முறை தோல்வியடைந்தது அவமானமாகக் காணப்பட்டது. முன்பின் யோசியாமல் போரில் ஈடுபட்டது தவறு என்று சிந்திக்கத் தொடங்கின்ை. அவனே பின்பு துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்று அறிந்து, முன்ருவது முறையும் போருக்கு ஆயத்தப் பட்டான். முதல் இரண்டு முறை நடந்த போர்களில் துர்க்கா வதி அம்மையார் தாமே போர்க்களம் புகுந்து போரிடவில்லை. அவ்வம்மையாரது படைவீரர்களே போர் புரிந்து எதிரிகளின் படைகளே முறியடித்தனர். ஆனால், முன்ருவது முறை தாம் போருக்குப் போகாமல் படைவீரரை ரவிச் சும்மா இருத்தல் முறைமையன்று என்று எண்ணித் தாமே போர்க்கோலம் பூண்டு யுத்தகளத்தை அடைந்தனர்.

7. அலிப்கான் இந்த முறை எப்படியும் வெற்றி காண வேண்டும் என்று தீர்மானித்தான். அதற்கு என்னவழி என்று சிந்தித்தான். உடனே அரசர்கட்குரிய உபாயமாகிய சாம்; தான, பேத, தண்டம் என்பனவற்றுள், தான உபாயத்தைக் கைக்கொள்ள எண்ணிப் பணத்தைச் செலவழித்தான். பணம் என்றல் பிணமும் வாய் திறக்கும் அல்லவா? பணத் தாசை பிடித்துத் துர்க்காவதியம்மையாரின் வீரர் பலர், அலிப் கான் படையில் சேர்ந்து கொண்டன்ர். அவர்களே என் னென்று சொல்வது? அரச துரோகிகள், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கயவர்கள் என்றுதானே சொல்லமுடியும். இத ஒல், துர்க்காவதி யம்மையாரின் படை குறைந்து போயிற்று. அன்டிலும், அரசியார் மனம் தளரவில்லை; வீராவேசத்துடன்