பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

முன் கூறிய முறைப்படி காகிதங்களைச் செய்யும் முறை யைக் கையாளவேண்டும்.

9. இந்தத் தொழிலைக் குடியானவர்கள் தாம் செய்ய வேண்டும் என்பது இல்லை. வேலையில்லாமல் இருப்பவர் பலரும், இதனைக் கைக்கொண்டு நல்ல ஊதியம் பெறலாம். நமக்குக் காகிதம் அதிகமாகத் தேவை. இம் முறைகளில் காகி தங்களைச் செய்து தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும். இத்தொழிலால் வேலையில்லாக் குறை குறையும். இந்தியாவில் பொருளாதார நிலையும் ஓங்கி வளரும். இதற்கு மக்கள் மன உறுதியும், கூட்டுறவுச் சங்கங்கள், ஜில்லா போர்ட்டுகள், அரசாங்கத்தார் உதவி முதலியனவும் பெரிதும் தேவையாகும். 10. காகிதம் எழுதுவதற்கு மட்டும் பயன்படுவதில்லை. தடித்த காகிதங்களாகிய அட்டைகளால் படகு, வண்டிச் சக்கரம், நீர்க்குழாய் முதலியன செய்யப்படுகின்றன. ஜப் பானியர் காகிதங்களால் விடுகட்டிக் கொள்கின்றனர் என் ருல் அதன் பயனக் குறித்து வேறு என்ன கூறுவது?

அருஞ் சொற்கள் :

சிலையில் கல்லில், சிரமம் - கஷ்டம், சன்னம் - மென்மையான,

மணல்-ஒருவகைப்புல், ஊதியம்-வருவாய்.

கேள்விகள் :

1. பழங்காலத்தில் எவ்வெவற்றை எழுதுவதற்குப் பயன் படுத்

தினர் : காகிதம் செய்யப் பயன்படும் பொருள்கள் எவை?

s

காகிதம் செய்யப்படும் முறை யாது? முதல் முதல் காகிதம் செய்யத் தொடங்கியவர்கள் யாவர்?

H.

f