பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மற்ருென்று பெண். அவை தினமும் தவருமல் பகல் 11யூனிக்குள் வந்து உணவு எடுக்கின்றன. அதனுல்தான் அம் லே கழுகுகுன்றம் என்று பெயர் பெற்றது. கழுகுகுன்றம் நாளடைவில் மருவிக் கழுக்குன்றம் ஆயிற்று. கழுகுக்கு உணவு அளிப்பவர் பண்டார இனத்தைச் சார்ந்தவர். ஒரு பெரிய தவலையில் சர்க்கரைப் பொங்கலைக் கொண்டுவந்து கழுகு சாப்பிடும் அளவுக்குக் கொடுத்துவிட்டு மிகுதியை விற்றுவிடுகின்றனர். அதனைத் தெய்வப் பிரசாதமாக எண் னிப் பலர் வாங்கிப் புசிக்கின்றனர். பண்டாரம் முதலில் ஒரு கிண்ணத்தில் நெய்யை யூற்றிக் கழுகுகளுக்கு வைக் கிருர், பிறகு பொங்கலத் தருகிருர்.

5. திருக்கழுக்குன்றம் சிறந்த சிவத்தலமாகும். இத சீனத் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகர் தம் தேவாரப் பதிகத்திலும், திருவாசகத்திலும் முறையே பாடியிருக்கின்றனர். அப்பாடல்களுள் சில எனக் குத் தெரியும். ஆதலால், நானும் சில பாடல்களைப் பாடிக் கடவுளை வழிபட்டேன். மேலே குறிப்பிட்ட பெரியவர்களால் பாடப்பட்டமிையால் இம்மலே கி. பி. ஆரும் நூற்றண்டு முதல் சிறப்புற்று விளங்குகிறது என்பது தெரிகிறதல்லவா? மலைமேல் இருந்து பார்த்தால் மகாபலிபுரத்துக் கலங்கரை விளக்கமும் காட்சி அளிக்கும். அங்கிருந்து ஒன்பது கல் தொலைவில்தான் மகாபலிபுரம் இருக்கிறது. ஆனல், நாங்கள் அங்கு சொல்லவில்லை. கீழே இறங்கினுேம் இறங்கும் போது மலைமீது குடைந்து எடுக்கப்பட்ட சிறு கோயிலையும் கண்டோம். அங்கு சில சிற்பங்கள், செதுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் கண்டோம். மணி 12 ஆயிற்று. பகல் உணவு கொண்டோம். சிறிது இளைப்புத்தீர உறங்கிளுேம். உண்ட