பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

5. உடற்பயிற்சியை எப்படிச் செய்வது ? " என்று நீங்கள் கேட்கலாம். பார் விளையாட வேண்டும். தண்டால் எடுக்கவேண்டும். ஓட்டம் ஒடவேண்டும். குஸ்தி பழகல் வேண்டும். நீந்துதலும் தேகப்பயிற்சிக்குரிய முறைகளில் ஒன்ருகும். -

6. பந்தாடுதலும் சிறந்த பயிற்சியாகும். பந்தாட்டத் தில் ஓய்ந்து இருக்க முடியாதல்லவா ? பந்து செல்லும் இடங் களுக்கெல்லாம் ஒடிக்கொண்டே இருக்க வேண்டும். இப் படிப் பல முறை செய்வதால் தொலே தூரம் கெடுக ஓடிய தற்குச் சமமாகிறது. நம் நாட்டுப் பழைய விளயாட்டாகிய பளிங்குடுகுடு என்னும் விளையாட்டைப் பற்றி என்ன நினைக் கின்றீர்கள்? அது எளிய விளையாட்டாக இருந்தாலும் அரிய விளையாட்டாகும். அதிலும் ஓடுவதால் ஏற்படக் கூடிய பலன்கள் உண்டாகும்.

7. வாலி பால், பேஸ்கட் பால் ஆடுவதும் சிறந்த தேகப்பயிற்சியாகும். ஆட்டம் இளைஞர்கட்கு மிக மிக

ق2-مہ .

அவசியமானது என்று அறிந்துதான் எல்லாப் பள்ளிக்கூடங் களிலும் இதனையும் ஒரு பாடமாகச் சேர்த்திருக்கின்றனர்.