பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

காலங்களில், பிணியாளர், கூர்ங்கத்தி கொண்டு அறுப்பு நிகழ்த்துகையில் யாதொரு துன்பமும் அடைவதில்லை. பல மருத்துவச் சாலைகளில் இது பெருந்துணை புரிந்து வருகின் றது. டாக்டர் சிம்ஸன் குளோரோபாம் கண்டுபிடித்துப் பிணி யாளர் கோயினைக் குறைத்த செய்தி பாரெங்கும் பரவியது. 1847-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியார் சிம்ஸ் னைத் தம் அரண்மனை மருத்துவராக அமர்த்திக்கொண்டனர். சிம்ஸன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மருத்து வக் கழகங்கள் அனைத்திலும் கெளரவ அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1855-ஆம் ஆண்டு பிரான்ஸ் விஞ்ஞானக் கழகம் இவருக்குப் பொற்கிழிப் பரிசு தந்து பாராட்டியது. இவரைப் பாராட்டிப் பல்வேறு இடங்களிலி ருந்து திருமுகங்கள் வந்த வண்ணமாய் இருந்தன.

9. இத்தகைய அறிஞரை நாம் மறக்க முடியுமா? இவர்க்கு உலகம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறது. செயற்கரிய செய்வார் பெரியர், அன்ருே?

அருஞ்சொற்ப்ொருள் - அல்லல் - துன்பம், சத்திரவித்தை கத்திகொண்டு அறுத்து நோய் தீர்க்கும் வித்தை, கண்ளுேட்டம்-கருணை, சான்று-சாட்சி. பகர. சொல்ல, ஏது-காரணம், ஆற்ற ஒண்ணு-பொறுக்க இயலாத, விஞ்ச பிற, முதுமொழி-பழமொழி, இருமுது குரவர் பெற்றதாய் தந்தை

. -

கேள்விகள் .

1. குலசேகரர், குமரகுருபரர் என்பவர் யார் : 2. சத்திரவித்தையை நம்மவரும் அறிந்திருந்தனர் என்பது எப்

படித் தெரிகிறது : - 3. சிம்ஸன் யா? அவர் எங்கனம் சிறந்த மருத்துவராக நேர்ந்தது: 4. அவர் எம்முறையில் மயக்க மருந்தைக் கண்டு பிடிக்கி

நேர்ந்தது? - - 5. அவர் எவ்வெவ்வாறு பாராட்டப்பட்டார்!