பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதையமைப்பு


குயில் கதை ஒரு புராணக் கதையாக அமைந்துள்ளது. பழம் பிறப்புக் கொள்கையடிப்படையிலே கதையைப் பின்னி அதில் வேதாந்தக் கருத்து விரவியிருப்பதாகக் கூறிப் பாட்டை முடிக்கிறார் பாரதியார். புதுமைக் கொள்கையைப் பாடும் பாரதியார். பழம் புராண நம்பிக்கைகளிலிருந்து விடுபடாதவராகவே காட்சியளிக்கின்றார்.

சாரல் கதை பழம் புராணங்களின் மூடத்தனத்தை முறியடிக்கும் குறிக்கோளுடனேயே பாரதிதாசனால் படைக்கப்பட்டிருக்கிறது. தன் குறிக்கோளை அது செம்மையாகச் செய்கிறது. வெறும் குறிக்கோள் உரையாக இல்லாமல் இலக்கியச் சுவையுள்ள ஒரு படைப்பாக அமைந்துள்ளது. அறிவுக் கருத்துக்களை வெல்லம் போன்ற இனிய தமிழில் சுவைமிக்க கற்பனை நயத்தோடு திறமாகப் படைத்துள்ளார் பாரதியின் தாசன்!

குயில் பாட்டின் கதை

குயில் மோகன இசை பாடிக் கொண்டிருக்கிறது. பாவலர் அங்கே செல்கிறார். குயில் தன் காதலை வெளிப்படுத்துகிறது. மீண்டும் நான்காம் நாள் சந்திக்க வருமாறு குயில் கூறுகிறது. காதல் வெறியுந்த மறுநாளே பாவலர் சோலைக்குச் செல்கிறார்.