பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

口 口 口 __________________________________________________

ஆய்வரங்கம் நடத்தப்பட்டது. கவிஞனுக்கே உரிய பண்புகள் பாவேந்தரிடம் எவ்வாறு படிந்திருந்தன என்பதைக் கட்டுரையாக்கி, அந்த ஆய்வரங்கில் நான் படித்தேன். அக்கட்டுரையும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

கவிஞர் சுரதா, வாழும் கவிஞர்களிடையே சற்று மாறு பட்டவர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்க் கவிதையுலகின் மீது ஏற்பட்ட தாக்கங்கள் அவரையோ, அவரது படைப்புக்களையோ எந்தவிதத் திலும் பாதிக்கவில்லை. அவர் அவராகவே இருக்கிறார்.

அறிஞர் அண்ணா, ஒளவை நடராசன் போன்ற தரமான விசிறிகள், சுரதாவுக்குள்ளனர். சுரதாவின் ஆற்றலைப் பற்றியும் அவர் படைப்புக்களின் தரத்தைப் பற்றியும் பலரும் பலவிதமாக-உயர்த்தியும் தாழ்த்தியும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். யார் எப்படிப் பேசி னாலும், கவிஞர் சுரதாவுக்குத் தமது படைப்புக்களின் மீது அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு. நான் இந்தச் சர்ச்சைகளில் ஈடுபடாமல், சுரதாவை மேலைநாட்டுக் கவிஞர்களோடு ஒப்பிட்டுப் புதிய கோணத்தில் ஆய்வு செய்திருக்கிறேன்.


சேலம்-16

I -2–’89 முருகு