பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1456-ஆம் ஆண்டு வி ல் ல ன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் தான் வில்லனின் முதல் சிறந்த படைப்பான The Legacy எழுதி முடிக்கப் பட்டது ; அவன் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்த கல்லூரித் தி ரு ட் டு ம் இவ்வாண்டில்தான் நிகழ்ந்தது. கிறிஸ்துமஸ் திருவிழாவின்போது வில்லன் தனது நான்கு நண்பர்களையும் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு பாரிசில் இருந்த நவேரி கல்லூரி'யைக் கொள்ளையடித்தான். இந்நண்பர்களுள் 'டாபரி என்பவன் கல்லூரிக் காலந் தொட்டே வில்லனோடு நெருங்கிப் பழகியவன்; வில்லன் எழுதும் கவிதைகளைப் படியெடுத்துக் கொடுப்பவன்.

டாபரி ஒருநாள் குடிபோதையில் இருந்தபோது பியரி மெர்ச்செண்ட் என்ற பாதிரியிடம் தான் கலந்து கொண்ட கல்லூரித் திருட்டைப் பற்றி உளறிவிட்டான். பின்னர் காவல்துறை கொடுத்த அடியில் அதில் கலந்து கொண்ட நண்பர்களையும் காட்டிக் கொடுத்துவிட்டான்.

காவல் துறையால் தீவிரமாகத் தேடப்பட்ட வில்லன், மீண்டும் தலைமறைவாகி விட்டான். நான்கரை ஆண்டுகள் காவல் துறையின் கண்ணில் மண்ணைத் துவிவிட்டு பிரெஞ்சு நாடெங்கும் சுற்றித் திரிந்தான். இந்தத் தலை மறைவுக் காலத்தில்தான் ஆர்லியன்ஸ் பிரபு (Charles-dOrleans) வைச் சந்தித்து அவர் அவைக் களப் புலவனாக போலே நகரில் கொஞ்ச நாள் இருக்கும் வாய்ப்பைப் பெற்றான் வில்லன்.

ஆர்லியன் பிரபு சார்லஸ், தாம் வாழ்ந்த காலத்தில் மிகச் சிறந்த கவிஞராக பிரெஞ்சு மக்களால் மதிக்கப்பட்டவர். வில்லன் எல்லாவிதத்திலும் அவருக்கு முரண்பட்டவன். சார்லஸ் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரபு ; வில்லன் காவ ல் துறைப் பட்டியலில் பதிவான குற்றவாளி.

10.5