பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற்கணையோடு வந்தவரைக் கருத்துக் கணையால் தோற்கடித்த ஆர்ச்சி பியாடா,

அலெக் சாண்டரின் அரங்கமயில் தாய்ஸ், இந்த அழகுத் தேவதைகள் எங்கே? அந்த வசந்தப் பணிக்காலம் எங்கே ஒடி மறைந்தது ? எந்த அழகுத் தேவதைக்காக அபெலார்டு காயடிக்கப்பட்டுச் சன்னியாசி ஆக்கப்பட்டானோ, அந்த அறிவுக் கோயிலின் அழகுச் சிற்பம் ஹெலாய் எங்கே? எந்த அழகு ராணியின் கட்டளைப்படி இளமை நலம் கொழிக்கும் பரிடான் சீன் நதியின் சுழித்தோடும் வெள்ளப் பெருக்கில் வீசி எறியப்பட்டானோ

அந்த அழகு ராணி எங்கே? அந்த வசந்தப் பணிக்காலம் எங்கே ஒடி மறைந்தது? கடற் கன்னியின் கானக் குரலும், அல்லி மலர் மேனியும் கொண்ட ஆரணங்கு பிளாஞ்ச்சி, தாமரை அடியெடுத்துச் சதிராடும் பெர்தா, பெண்மைக்கு இலக்கணம் வகுத்த பீட்ரிஸ், ஆலிஸ் -

1 I 0