பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டைவிட்டுக் கிளம்பும் போது வழக்கமான அவன் முசுமுசுத் தொப்பியைத் (Fur cap) தலையில் அணிந்ததும் அவன் வாய் முணுமுணுக்கும் வாலிபப் பாடல் வரிகள் :

பயனற்ற ஆலைமுதலாளி-வீட்டில் படுத்திருப்பான் எப்போதும் சோம்பேறி! காலி-ஆமாம் படுத்திருப்பான் எப்போதும் சோம்பேறி! காலி

1909 ஆம் ஆண்டில் அவன் பதினாறு வயதுக் கட்டிளங் காளை. நொவின்ஸ்கயா சிறைச்சாலையில் அடைபட்டு இருந்த 13 பெண் அரசியற் கைதிகள் தப்பிச் செல்வதற்கு அவன் துணை புரிந்தான். அக்கைதிகள் மாறுவேடத்தில் தப்பிச் செல்ல அவன் தாயும் சகோதரிகளும் பள்ளிச் சீருடை தைத்துக் கொடுத்தனர். அதற்காக அவன் சிறைப் படுத்தப்பட்டான். பின்னர் மைனர்' என்று விடுதலை செய்யப்பட்டான். -

சிறையில் இருந்தபோதுதான் காந்தியடிகளுக்கு அறப் போரை பற்றிய ஞானோதயம் பிறந்தது. சிறையில் இருந்தபோதுதான் எதிர்காலத்தில் தான் சமைக்கவிருந்த சமதருமக் கலையைப் பற்றிய ஞானோதயம் அவனுக்கு ஏற்பட்டது.

ஷெல்லி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ‘piro; 345;&sir you%ulb’ (The necessity of Atheism) என்ற கட்டுரை எழுதி வெளியிட்டதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டான். கலைக்கல்லூரி யில் பயின்றபோது பழைய மரபுக் கலையை (Bourgeois Art) இகழ்ந்து பேசியதற்காகக் கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டான் மாயகோவ்ஸ்கி.

1 13