பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயருடன் சேர்த்துக் கொண்டார். ஆனால் செக்நாட்டு 'நெருடா' வைப் பற்றி அப்போது இ வ. ரு க்கு ஒன்றும் தெரியாது. -

நெருடா உணர்ச்சி மிக்க கதைப் பாடல்களும் நாட்டுப் um Lá segub (Ballads and narrative Poems) fico ou எழுதிக் குவித்த செக்நாட்டுப் பெருங்கவிஞர் : மக்கள் கவிஞர். செக்நாட்டு மக்கள் அவரைப் பெரிதும் போற்றி மதித்தனர்; சிலையெடுத்துப் பெ ரு மை சேர்த்தனர். பாப்லோ நெருடா செக் நாட்டுத் தலை நகரான பிராகுவுக்கு முதன் முறையாகச் சென்றபோது, தாடி வைத்த இந்தக் கவிஞரின் சிலைக்கு மலர் வளையம் வைத்து வணங்கினார்.

சில கவிஞர்களின் நடவடிக்கைகளுக்கு மூலம் கண்டறிய முடியாது, ரிஷிமூலம் போல. காரண காரியத்தை ஆராய்ந்து கொண்டிருப்பவன் கவிஞனாக இருப்பதில்லை; கவிஞனாக இருப்பவனும் காரண காரியத்தை ஆராய் வதில்லை. கவிஞனாக இருக்கும் அவனை அவனாகவே நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பாப்லோ நெருடா சாண்டியாகோ நகரத்தில் கல்லூரி மாணவனாக இருந்தபோது, அவ்வூரில் இருந்த இளைய இலக்கியத் தலைமுறையுடன் இவரும் ஒன்றிவிட்டார். கவிஞர்கள், இசைக்கலைஞர்கள், ஒவியர்கள், நாடகாசிரி யர்கள் - யாவரும் அதில் அடங்குவர். இவர்கள் கூட்டத் தில் ஆல்பெர்ட்டோ வால்டிவியா (Alberto Valdivia) என்ற நடுவயதுக் கவிஞர் ஒருவரும் கலந்து கொள்வார். மிக மெலிந்து நோயாளித் தோற்றத்தோடு காட்சிதரும் அவருடைய உடம்பு, முழுக்க முழுக்க எலும்பால் ஆனது போல் இருக்கும் . நரைத்துக் கலைந்த தலைமயிர். கிட்டப்பார்வைக் கண் ணா டி அணிந்திருக்கும் அவர்

1 2 3