பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்கூந்தலும் நெருடாவைப் பித்தாக அடிப்பதுண்டு. என்றாலும் கொஞ்ச நாளில் அவருக்கு அவள் நோயாக மாறிவிட்டாள்.

சில நாட்களில் சிறிய ஓசை கேட்டு நள்ளிரவில் நெருடா விழித்துப் பார் ப் பார். அவரைச் சுற்றித் தொங்கும் கொசுவலைக்கு வெளியே - மங்கிய விளக்கொளியில் - மேனியில் வெள்ளுடையும், கையில் நாட்டுக் குத்துவாளு மாகக் கவலையும் பீதியும் தோய்ந்த முகத்துடன், அந்தப் பர்மியச் சிறுத்தை மணிக்கணக்காக வளைய வந்து கொண்டிருக்கும். 'உன்னைக் கொன்று விட்டால் என் அச்சமும் பீதியும் அடியோடு நின்றுவிடும்’ என்று அவரைப் பார்த்துக் கத்துவாள். கொஞ்சநாளில் அவள் நெருடா வைக் கொன்றும் இருப்பாள். நல்ல வேளையாக பர்மா விலிருந்து சிலோனுக்கு மாறுதல் செய்தி அவருக்குக் கிட்டியது. சிலோனுக்குப் புறப்பட இரகசிய ஏற்பாடு களைச் செய்தார். தமது துணிமணிகளையும், விலை உயர்ந்த நூல்களையும் கூட எடுத்துக் கொள்ளாமல், ஜோஸியிடம் சொல்லாமல் சிலோ னு க் கு க் கப்பல் ஏறிவிட்டார் நெரூடா. -

போனஸ் அயர் ஸ் நகரத்தில் நடாலியா பொடானா (Natallo Botana) என்ற ஒரு பத்திராதிபர் இருந்தார். அவர் பெரிய கோடீசுவரர். ஒருநாள் மாலை பாப்லோ நெருடாவும், ஸ்பெயின் நாட்டுப் பெ ரு ங் கவி ஞ ர் லார்காவும் அவருடைய மாளி கை க் கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். நடாலியா பொடான பெரும் புரட்சிக்காரர் ; சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர். ஒர் இளமரக் காட்டின் நடுவே புதிய கலைக்கனவாக அவர் மாளிகை அமைந்திருந்தது. உலகின் பல பகுதியில் இருந்தும் வரவழைக்கப்பட்ட வ ண் ண ப் பறவைகள் நூற்றுக்கணக்கான கூடுகளை அலங்கரித்தன. அவர்

1 26