பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்பெயின் தா ட் டு ப் பெருங் கவிஞனான ஃபெடரிகோ கார்ஸியா லார்காவும் பாப்லோ நெருடாவும் நெருங்கிய நண்பர்கள். லார்காவைப் பற்றி நெருடா குறிப்பிடும் போது 'அழகும், மேதைமையும், சிறகு வி ரித்து ப் பறக்கும் உள்ளமும், பளிங்கு நீர் வீழ்ச்சியும் அவன் படைப்பில் ஒன்ருகக் கலந்து வரும். கவர்ச்சியூட்டும் காந்த இன்பத்தைத் தன்னைச் சூழ்ந்திருப்பவர் மீது பரப்பும் கவிதா மண்டலமாக அவ ன் விளங்கினான். நாடக மேடையாக இருந்தாலும் அழகின் அலை வீச்சுக் களைத் தன்னைச் சுற்றிப்படரவிட்டான். லார்காவைப் போல் ஆற்றல் மிக்க மந்திரக் கையோடு கூடிய வேருெரு கவிஞனை நான் என் வாழ் நாளி ல் சந்தித்ததில்லை. சிரிப்பை மனப்பூர்வமாக நேசித்து எ ன் னு ட ன் பழகிய வேருெரு சோதரனையும் நான் கண்டதில்லை. அவன் சிரித்தான் ; சிந்தித்தான்; பாடினான் ; பியானோ வாசித் தான் ; இ ைட யி டையே சுடர்விட்டு மின்னினான். இயற்கை தனது பூரணமான ஆற்றல்களையெல்லாம் அவன் மீது அள்ளிச் சொரிந்திருந்தது. அவன் தங்கச் சிற்பி ; கவி ைத த் தேனி ' என்றெல்லாம் பாராட்டிக் கூறுகிரு.ர்.

அரசியல் விரோ தி க ளா ல் லார்கா அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றார் நெருடா. லார்காமீது நீண்ட இரங்கற்பா ஒன்று (oda a Federico Garcia Lorca) GrQp53, 5 lo g glp.55 துயரத்தை அதில் கொட்டி வைத்தார். லார்கா இறந்த ஓராண்டுக்குப் பிறகு, நெருடா அவரைப் பற்றி ஒரு நி ைன வு ச் சொற்பொழிவாற்றினார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து நின்று லார்காவைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள இரங்கற்பாடலில் அவனுக்காக மக்கள் மருத்துவமனைக்கு நீலவண்ணம் பூசினர் ' என்று

一巫名鸟