பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில், அரசியல் காரணங்களுக்காக இவன் கொல்லப் பட்டான் என்று கூறுவர். ப ா ர தி ைய ப் பே ா ல் , பாரதிதாசனைப்போல், ஜெர்மானியக் கவிஞன் பிரெட் (Bertolt Brecht) டைப்போல் இவன் தீவிர அரசியல்வாதி அல்லன். எந்தக் கட்சிமுத்திரையும் இவன் மீது விழவில்லை; எந்தக் கொடிக்கம்பத்தின் கீழும் இவன் கொள் ைக முழக்கம் செய்தது கிடையாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஸ்பெயின் தீபகர்ப்பத்தில் வேர்விட்டுச் செழித்த கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கால க் கண் ணா டி யாக விளங்கிய மாகவிஞன் இவன்.

லார்காவின் பரிதாபச்சாவு உலக மக்களின் உள்ளத்தில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியதோடு, லார்காவுக்கும் அளவு கடந்த விளம்பரத்தையும் புகழையும் ஈட்டிக் கொடுத்தது. அமெரிக்க நாடுகளிலும், இங்கிலாந்திலும் இவன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, எல்லா மக்களாலும் விரும்பிப் படிக்கப்பட்டன.

‘ என் தந்தை ஒரு பணக்கார நிலக்கிழார் : குதிரைச் சவாரியில் வல்லவர். என் தாய் ஓர் ஆசிரியை குறிப் பிடத்தக்க ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர். என் இளமைவாழ்க்கை செழிப்பான எங்கள் தோட்டத்திலேயே கழிந்தது . என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறான் லார்கா.

லார்கா சிறந்த கவிஞன் ; சிறந்த ஒவியன் நாடகத் துறையில் .ெ ப ரி ய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவன் ; ஸ்பெயின் நாட்டு மரபிசையிலும், நாட்டுப்புற இசையிலும் வல்லவன்.

I 32