பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்ரீட் தகவில் செலிடென்சியாவின் ம | ண வ ன க இருந்தபோது, இவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக வாய்த்தவர் மேனுவல் டிஃபல்லா என்பவர். அவருடைய நட்பு லார்காவின் இலக்கியப் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஸ்பானிய நாட்டுக் கிராமியப் பாடல்களைத் (Folk Songs) திரட்டுவதற்கு லார்காவுக்கு ஊக்கமளித்துத் துணைபுரிந்தவர் டி ஃப ல் லா. அவர் துணையோடு லார்கா கேண்டே ஜாண்டோ (Cante lando) என்ற இசை விழாவை நடத்தினான். ஆழ்ந்த இசை என்பது இதன் பொருள். இவ்விழாவை முன்னின்று நடத்தியதால் ஸ்பெயின்நாட்டு நாடோடிப் பாடகர்களும், நாட்டியக்காரர்களும் இவனுக்கு மிகவும் வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்.

முதல் உலகப்போர் முடிந்த பிறகு, ஐரோப்பிய நாடு களிலிருந்து கிளம்பிய ஃப்யூசரிசம், டாடாயிசம் என்ற புரட்சி அலைகள் ரெஸிடென்சியாவில் இருந்த ஸ்பானிய இலக்கியவாதிகளிடத்திலும் பாதிப்புகளை உண்டாக்கின. ஆனால் லார்கா எந்த இலக்கியக் கட்சியிலும் ஈடுபாடு காட்டவில்லை. மரபிலும், புதுமையிலும் காணப்பட்ட நல்ல அம்சங்கள் யாவும், அவனை யும் அறியாமல் லார்காவின் படைப்புகளில் இடம் பெற்றன. லார்கா புதுக்கவிஞனாகவும் (Modern Poet) அதே சமயத்தில் மரபோடு கூடிய கிராமியப் பாடல் பாடும் கவிஞனாகவும் {Folk Poet) விளங்கியது வியப்பிற்குரியது.

இளமையில் நாட்டுப்புறத்தில் வளர்ந்த காரணத்தால் நாட்டுப்புறச் சூ ழ் நி ைல யும், நாட்டுப்புறக் க ைல இலக்கியங்களும் லார்காவுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகிவிட்டன. ச ரி யாக ப் பேசிப்பழகாத குழந்தைப்

«» Futurism, Dadaism

1 & 5