பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தாடிய போதும், இவர் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசியற் பகைவர்கள் புதுவைத் தெருவில் இவரைப் புரட்டி எடுத்த போதும், அந்தக் கொடுமைகளை முகஞ்சுழிக்காமல் ஏற்றுக் கொள்ளும் அஞ்சாமையும் நெஞ்சுரமும் பாவேந்தருக்கு நிறையவே இருந்தது.

கவிஞன் எவனுக்கும் கட்டுப்பட்டு வாழக்கூடாது என்ப திலும், காசுக்காகக் கவிஞன் விலை போகக் கூடாது என்பதிலும் பாவேந்தர் மிகவும் எச்சரிக்கையாக இருந் திருக்கிறார். பாவேந்தரின் இந்தப் பெ ரு ங் கு ண ம் இந்நூலில் தக்க மேற்கோள்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

ஓர் இளைஞர் கவிதைகள் எழுதிய குறிப்பேடுகளுடன் பாவேந்தரைப் பார்க்க வருகிறார். அக்குறிப்பேடுகளை மேற்போக்காகப் பார்த்த பாவேந்தர் சரி நீ என்ன பண்றே ? என்று கேட்கிறார்.

கவிதையைத்தான் தொழிலா வெச்சிருக்கேன் என்று பதில் கூறுகிறார் இளைஞர். உடனே பாவேந்தருக்குக் கோபம் வந்துவிடுகிறது.

நீ உருப்படமாட்டே ' என்று கூறிக் குறிப்பேட்டை வீசி எறிகிறார். -

எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போயி வச்சிட்டு, ஒரு வெத்திலைப் பாக்குக் கடை வையி. தெனமும் அஞ்சு ருவா சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு எழுதலாம் ' என்கிறார். இளைஞர் திடுக்கிட்டு நிற்கிறார். -

"ஏன் சொல்றேன் தெரியுமா ? உன் வயித்துப் பசிக்கு ஏதாவது ஒரு வருவாயைத் தேடிக்கிட்டாத்தான், நீ துணிச்சலா எழுதலாம்; ஒருத்தனையும் எதிர்பார்க்க வேண்டியிருக்காது. இல்லேன்னா, அவனவன் சொல்றத

22