பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளும் கவிஞர்கள், சில சமயங்களில் குழந்தைகளைப் போலவும் சில ச ம ய ங் களி ல் பயித்தியக்காரர்களைப் போலவும் நடந்து கொள்வதுண்டு.

ஷெல்லி இத்தாலியில் கடற்கரையோரமாக ஒரு வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சி. வீட்டின் கூடத்தில் ஷெல்லியின் மனைவியான மேரியும், சில இலக்கிய அன்பர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருக் கின்றனர். அப்போது கடற்கரையோரத்தில் நீர்த் தொட்டியில் படுத்தவண்ணம் ஏ தோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ஷெல்லி. திடீரென்று அவன் உள்ளத் தில் கவிதை மின்னல் ஒன்று தோன்றியது. உடனே எழுந்தான். தான் நிர்வாணமாக இருந்ததை உணர வில் ைல அவ ன், எல்லோரும் அமர்ந்திருக்கும் தன் வீட்டின் நடுக்கூடத்தில் அதே நிலையில் நுழைந்து விட்டான். அவன் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவன் மனைவி மேரி, ஷெல்லி! இது என்ன பயித்தியக் காரத்தனம் ? என்று கூச்சலிட்டாள். அப்போதுதான் ஷெல்லி தன் நிலையுணர்ந்தான். இதுபோன்ற நிகழ்ச்சி கள், மெய்மறந்த நிலையில் கவிஞர்கள் வாழ்க்கையில் இடம்பெறுவது உண்டு. ஏன் இவ்வாறு நடந்து கொள் கிறார்கள் ? அதற்கு விடை கிடையாது. -

இதேபோல் வி ைட காண முடி யா த சில பண்புகள் பாவேந்தருக்கும் உண்டு. இக்கறுப்புக்குயிலின் விசித்திரப் பண்புகளையும் கூர்ந்து நோக்கி, மன்னர் மன்னன் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

குளிப்பது சில மணித்துளிகளில் முடிந்துவிடும். எத்தனை அண்டா வெந்நீராயிருந்தாலும் செம்பினால் மொண்டு மொண்டு துடையின்மீது ஊற்றிச் சுகம் காண்பார் - அது சிந்தனை நேரமாகிவிடும். மலங்கழிக்கப் போகுமிடத்தில்

  1. 4