பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி :

பதில் :

அவரைப் பின்பற்றி எழுதினேன். பழையனூரில் டிக்கடை வைத்திருந்த அழகப்பன் என்பவர் பாரதிதாசன் கவிதைகளை எனக்கு அறிமுகப் படுத்தினார். அவர் பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர் ஒருநாள் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியை எனக்கு அவர் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அன்றிலிருந்து என் உள்ளத்தில் இடம் பிடித்திருந்த சுத்தானந்த பா ர தி "அவுட்” .

பாவேந்தர் தொடர்பு எப்போது ஏற்பட்டது?

1941 ஜனவரி 14-ஆம் நாள். அன்று தைப் பொங்கல்.

பத்திரிகையில் நீங்கள் கவிஞராக அறிமுக மானது எப்போது?

என்னை முதன்முதலில் கவிஞராக அறிமுகப் படுத்தியவர் கவிஞர் திருலோக சீதாராம். தாம் நடத்தி வந்த சிவாஜி' யில் என் கவிதைகளைத் தொடர்ந்து பத்து வாரம் வெளியிட்டு என்னை விளம்பரப்படுத்தினார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த தலைவன்’ பத்திரிகையில் கொஞ்ச நாள் துணையாசிரியராகப் பணி யாற்றினேன்.

பாவேந்தருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி?

பாவேந்தரின் ஆற்றல் பரந்து பட்டது. அவருடைய தொடர்பு என்னைக் கவிஞனாக உயர்த்தியது. பாவேந்தரோடு நான்காண்டுகள்

33