பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பாரதியின் நிழல்; தேசிக விநாயகம் பிள்ளை, ச. து. சு. யோகி, சுத்தானந்த பாரதி மூவரும் பாரதியின் அங்கங்கள். பாரதி ஒரு சகாப்தம் என்றால் பாரதிதாசன் அடுத்த சகாப்தம், முதலில் பாரதியைப் பின்பற்றிப் புரட்சிக் கவி, சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஆகியவற்றைப் பாரதியின் சாயலில் எழுதிய பாரதிதாசன், பின்னால் எழுதிய படைப்புக்களில் முற்றிலும் வேறுபடுகிறார்; சில இடங்களில் முரண்படு கிறார். தமக்கென்று தனித் தன்மையுள்ள ஒரு பாதையை வகுத்துக் கொள்கிறார்.

எங்கெங்கு காணினும் சக்தியடா - என்று தொடங்கும் பாடலுக்குக் கீழே உள்ள பாரதிதாசனை' அடித்துவிட்டு 'பாரதி' என்று போட்டு விடலாம். அந்த அளவு முழுமை யான பாரதி ஆதிக்கம் அப்பாடலில் உள்ளது. என்றாலும், பிற்காலத்தில் பாரதியை விட்டுப் பாரதிதாசன் ஒதுங்கக் காரணம் என்ன? தமிழர் மறுமலர்ச்சி இயக்கமான திராவிட இயக்கத்தின்பால் கொண்ட பற்றும் ஈடுபாடும் தான் காரணம்.

திராவிட இயக்கம் தனது வளர்ச்சிக்குச் சில அரசியல் சமுதாயக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டிருந் தாலும், தமிழ் மொழியின் மறுமலர்ச்சியையும், பண்டைத் தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சியையும் வ லு வா ன காரணங்களாகவும் கொண்டிருந்தது. எனவே தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் இயல்பாகவே இவ்வியக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். எனவே பாரதிதாசன் திராவிட இயக்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்டது தவிர்க்க முடியாத ஒன்று.

தமிழ்ப் புலவர்கள் எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங் களை மேற்கோள் காட்டிப் பேசினர். சங்க காலம் ஒரு மந்திரச் சொல்லாயிற்று பள்ளியிலும் கல்லூரியிலும்

39